வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
இடிச்ச மாசி( காயல் ஸ்பெஷல் சைடு டிஷ் ) Print E-mail

தேவையான பொருட்கள்

 

மாசி - 25 கிராம்

சிறிய தேங்காய் - பாதி (கீறிக்கொள்ளவும்)

காய்ந்த மிளகாய் - 2

பச்சைமிளகாய் - 2

சிறிய வெங்காயம் - 1அல்லது 2

உப்பு- 2 நுள்ளு

செய்முறை:-

முதலில் காய்ந்த மிளகாயையும்,உப்பையும் உரலில் இடித்துக் கொள்ளவும்.

அதனுடன் மாசியையும் போட்டு இடித்துக்கொள்ளவும். சின்னத்துண்டுகளாக இடிச்சதும்...

கீறின தேங்காய்த் துண்டுகளை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு இடிக்கவும்.

எல்லாத்துண்டுகளையும் போட்டு இடிக்கவும்.எல்லாவற்றையும் சேர்ந்து வரும்படி இடிக்கவும்.

கொர கொரப்பாக இருக்க வேண்டும்.அதில் பச்சைமிளகாய்,வெங்காயம் போடவும்.

அதனையும் கொரகொரப்பாக இடிக்கவும்.மிக நைஸாக இடிக்கக்கூடாது.

இவ்வாறு இருக்குமாறு இடித்துக் கொள்ளவும்.

 

இடிச்ச மாசி ரெடி.

குறிப்பு :-

இது எங்க ஊரில் மிகவும் உபயோகப்படுத்தும் சைடு டிஷ்.

சாதத்துக்கு இதுவும்,ரசமும் இருந்தாலே போதும் அப்படியொரு ருசி.

சாதத்துக்கு மட்டுமில்லை.நெய்ச்சோறு,தக்காளிச்சோறு,சப்பாத்தி,இடியாப்பம்,

ஆப்பம்,அடை,எல்லாற்றுக்கும் இது நல்ல காம்பினேஷன்.

சின்ன பிக்னிக் க்கும் இதை ரெடிபண்ணி கொண்டுபோவோம்.

இதை மிக்ஸியிலும் அரைக்கிறார்கள்.ஆனால் இடிச்சதற்கு தான்

அளவில்லா ருசி.

-Mrs,Seyed


கருத்துக்கள் (24)Add Comment
...
பதிவாளர்: sac sahla, June 16, 2009
ahaaaaaaaaaaaaaaaaaaaaa.super.kayal king ithu.yanakku romba pidikkum.smilies/grin.gif
...
பதிவாளர்: Mrs,seyed, June 16, 2009
அட்மின் இதனுடன் 9 புகைப்படங்கள் இணைத்திருந்தேனே...அது வரவில்லையே....?
நன்றி சஹ்லா...காயல் கிங் தானிது...சாப்பிட்டுப் பார்த்தவர்கள் இதன் சுவையை மறக்கமுடியாது...
...
பதிவாளர்: admin, June 16, 2009
உடனே கவனிக்கிறேன்...
...
பதிவாளர்: Mrs,seyed, June 16, 2009
நன்றி அட்மின்..உடனே கவனித்து சரிப்படுத்தியமைக்கு...smilies/smiley.gif
...
பதிவாளர்: SANTHOSHI, June 16, 2009
திருமதி சையத்! மாசி என்பது ஒரு வகை கருவாடுதானே?
...
பதிவாளர்: nishar, June 16, 2009
இடிச்ச மாசி சூப்பரயிருக்குமே...
...
பதிவாளர்: fathi, June 16, 2009
WOW... மாசி இடித்த உரலில் சுடு சாதத்தை போட்டு சாப்பிட்டால் அதன் ருசியே தனி தான்....smilies/wink.gif
...
பதிவாளர்: sithi, June 16, 2009

Mrs,seyed இடித்த மாசி எனக்கு ரொம்ப பிடிக்கும்.என்ன தான் மிக்ஸியில் திரித்தாலும் உரலில் இடித்த ருசி இல்லை. ஆனால் எங்க வீட்டில் உரலே இல்லை.
...
பதிவாளர்: jaleela, June 16, 2009
ஆஹா சூப்பர் மாசி , ரொட்டிக்கு ரொம்ப ஜோரா இருக்கும்
...
பதிவாளர்: Mrs,seyed, June 16, 2009
ஆம் சந்தோஷி...இது ஒருவகை காய்ந்தமீன்.மாட்டுக்கொம்புபோல இருக்கும்.
...
பதிவாளர்: Mrs,seyed, June 16, 2009
நன்றி சந்தோஷி,நிஷார் ,ஃபாத்தி,சித்தி,ஜலீலா உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.

ஃபாத்தி நீங்க சொன்னது போல சுடுசோறை உரலில் போட்டு மாசியுடன்
பிரட்டி உருண்டைப் பிடித்து சாப்பிட்டால் ருசியோ...ருசி.

சித்தியக்கா வாங்க எங்க வீட்டுக்கு நான் உரலில் இடிச்சமாசி தருகிறேன்.

ஆமாம் ஜலீலாக்கா அரிசிமாவு ரொட்டியை மறந்துவிட்டேன்.அதற்கும் இது சூப்பர் காம்பினேஷன்.smilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/cheesy.gif
...
பதிவாளர்: khatheeja, June 16, 2009
wow mrs.seyed idhu namma ooru saappadu.

namma ooru saappada adichikka edhuvum illa.

kayal food thanee taste thaansmilies/smiley.gif
...
பதிவாளர்: admin, June 17, 2009
ஹும்....ஞாபகம் வருதே.....ஞாபகம் வருதே.... ரொட்டியும், மாசியும் அம்மா கொடுத்து உண்ட ஞாபகம் வருதே... smilies/smiley.gif

ஒரு வேடிக்கை: மாசி என்பது மீன் உணவு என்பது நிறைய பேருக்கு தெரியாது.
...
பதிவாளர்: Mrs,seyed, June 17, 2009
கருத்துக்கு நன்றி கதீஜா
நன்றி அட்மின்.

அட்மின் நீங்க இடிச்ச மாசி சாப்பிட்டிருக்கீங்களா...!!!?smilies/smiley.gif
...
பதிவாளர்: Mrs,seyed, June 17, 2009
அட்மின் ஒரு வேண்டுகோள்...இதன் ஃபோட்டோக்கள் மிகச் சிறியதாக இருக்கிறது.கொஞ்சம பெரியதாக போடமுடியுமா...?அப்போதுதான் தெளிவாக ஃபோட்டோக்கள் தெரியும்.
...
பதிவாளர்: sac sahla, June 17, 2009
அட்மின் அவர்களுக்கு
நான் இதற்க்கு முன்பு யன்னுடய்ய hand embroidery என்றும் ,மட்டன் கட்லேட் என்றும் அனுப்பி இருந்தேன்
ஆனால் அவைகள் இன்னும் t.k க்கு வர வில்லை .முன் பெல்லாம் எந்த குறிப்பையும் போட்ட உடன் t.k.க்கு வந்து விடும் .இப்போது ரொம்ப லேட் ஆகுது .யேன்.இதனால் நிறைய குறிப்புகள் போட intrest இல்லாமல் போய் விடுகிறது . இந்த பிரச்சனைகளை மிகவும் கூடிய விரைவில் தீர்க்குமாறு பணிவுடன் கேட்டு கொள்கி்றேன் .இப்போது hand வொர்க் போட்டிருக்கிறேன் அதையும் போடுமாறு கேட்டு கொள்கி்றேன் .சிரமத்திற்கு மன்னிக்கவும் .உங்கள் பதிலை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
எத்தனை நாட்கள் ஆகும் t.k.க்கு போட
...
பதிவாளர்: feroza, June 18, 2009
மாசியை காட்டி உரல் ஆசையை ஏற்படுத்திவிட்டிர்கள் மிக்ஸில் எப்படி செய்தாலும்
சுவை குறைவாகதான் இருக்கு[சென்னையில் கல் உரலைதேடனும்] ஊருக்கு போன தேங்கபோட்டு வறுத்த அரிசிமாவு ரொட்டியும்
மாசியும் கொஞ்சம் மீன் ஆனமும் சேர்த்து சாப்பிடுவோம் அது நாக்கில் இன்னும் இருக்கு
...
பதிவாளர்: dharshini, June 22, 2009
smilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gifsmilies/angry.gif....
...
பதிவாளர்: Mrs,seyed, July 03, 2009
ஃபெரோஜா உங்க கருத்தை இப்போது தான் பார்த்தேன்.நன்றி.
கல்லுரல் வாங்கியாச்சா....?இடிச்சமாசி சாப்பிட்டீங்களா....?
...
பதிவாளர்: Mrs,seyed, July 03, 2009
தர்ஷிணி நீங்க என்ன சொல்கிறீர்கள்....?
நீங்க சைவமா....?>smilies/sad.gifsmilies/cheesy.gif
...
பதிவாளர்: feroza, July 04, 2009
இன்ஷாஅல்லா நம் ஊருக்கு வரும் போதுதான் கல் உரல் உலக்கை எங்கு கிடைக்கும் என்று
[உங்களுக்குதெரியுமா] விசாரித்து வாங்கி வர வேண்டும்.
...
பதிவாளர்: suganyabharat, September 01, 2009
Mrs.Seyed உங்க இடுச்ச மாசி பார்க்க சூப்பர்.மாசியை வைத்து வேரு என்ன செய்யலாம்னு கொஞ்சம் சொல்லுங்க please.
நானும் மாசி வைத்திருக்கிரேன்.ஆனால் நான் இது வரை மாசி சாப்பிட்டதில்லை. நீங்க சொன்னதை செய்து பார்க்க என்னிடம் உரலும் இல்லை.
...
பதிவாளர்: mahza, September 01, 2009
salam,mrs.சயேத்.neega kayapatanama?kayalil where?i m n hk.i know hw s super mashi kari,u give many more raceipi ok
...
பதிவாளர்: Mrs,seyed, September 01, 2009
சுகன்யா,மெஹ்ஜா உங்க கருத்துக்கு நன்றி.
நான் காயலில் சொளுக்கார்தெருவில் இருக்கிறேன்.உங்களுக்கு எந்த தெரு மெஹ்ஜா....?

சுகன்யா.......! மாசியை பரபரப்பாக பொடித்துவைத்துக்கொண்டால் நாம் செய்யும் கீரைக்கூட்டு,மற்றும் காய்கறி உணவுகளில் கொஞ்சம் சேர்த்தால் அதன் சுவை கூடும்.

இன்னும் இதனைவைத்து செய்யக்கூடிய குறிப்புகளைக்கொடுக்கிறேன்.

நீங்கள் இந்த இடிச்சமாசியை உரல் இல்லாவிட்டால் மிக்ஸியில் ஒன் பை ஒன்னாக போட்டு பரபரப்பாக அரைச்சு சாப்பிட்டுப்பாருங்க..
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form