வாங்க பழகலாம்

Re:good sayings
rammalar 12.3.2010 0:06
Re:good sayings
yogarani 11.3.2010 22:40
பில்கேட்ஸை முந்தினார்...
bkvrdr 11.3.2010 11:24

உங்கள் கருத்து

திருமணத்தை ஏன் பதிவு
உண்மை தான். திருமண சான்றி
By: kavithadevi
நித்தியானந்தாவும் பி
கதையை இரசித்து, பாராட்டிய
By: nizamudeen
நித்தியானந்தாவும் பி
டியர் அட்மின், தங்களின் ம
By: nizamudeen
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
நன்றி harini,ஜாரு அடுத்த
By: hawwa
Athirah 3.mp4
என் அன்புக்குட்டிச்செல்லம
By: malikka
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
ரொம்ப அருமையாக இருக்கு.ப
By: zaru
தவா ப்ரை ஸ்பிரிங் ரோ
its really very different
By: harini
அழகான புருவங்களுக்கு
சிந்து உங்க டிப்ஸ் அழகாகய
By: harini
கோக்கனட் மக்ரூன்ஸ் Print E-mail

 

 
 
தேவையான பொருட்கள்

 

ஸ்வீட்டன்ட் கோக்கனட் ப்ளேக்ஸ் -    14 Oz பேக்கட் ஒன்று ( 396 கிராம்)
ஸ்வீட்டன்ட் கண்டென்ஸ்ட் மில்க் (அ) மில்க்மெய்ட் - 14 Oz கேன் ஒன்று ( 396 கிராம்)
வெண்ணெய் - 1 ஸ்டிக் ( 115 கிராம்)
முட்டை - 3
 
செய்முறை 


முட்டையையும்,வெண்ணையையும் மூன்று மணி நேரங்கள் முன்பாக ப்ரிட்ஜ்-லிருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
முட்டைகளை உடைத்து வெள்ளைக்கருவை மட்டும் தனியாகப் பிரிக்கவும்.
 
 
எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு வெள்ளைக்கருக்களை நன்றாகக் கலக்கவும். 
 
 
 
வெள்ளைக்கரு கனமில்லாமல் சோப்புநுரை போல வரும் வரை கலந்து வைக்கவும்.
 
 
 
வெண்ணெயை பீட்டரால் கலக்கவும். 
 
 
 
வெண்ணெயுடன் இரண்டு ஸ்பூன் கலர் சர்க்கரையை சேர்த்து நன்றாக கலக்கவும். ( சர்க்கரை சேர்ப்பது கட்டாயமில்லை, கலர்புல்லாக இருக்குமே என்று சேர்த்திருக்கிறேன்..:) )
 
 
 
கண்டென்ஸ்ட் மில்க்-ஐ வெண்ணெயுடன் சேர்க்கவும்.
 
 
 
விஸ்க் மூலம் மெதுவாக கலக்கவும்.
 
 

 
கோக்கனட் ப்ளேக்ஸ்-ஐயும் சேர்த்து விஸ்க்கால் கலக்கவும்.
 
 
 
ஏற்கனவே கலக்கி வைத்திருக்கும்  முட்டையின் வெள்ளைக்கருவையும் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும்.
 
 
 
 
அதனை கலக்கவும்
 
 
வெண்ணெய் தடவிய கப் கேக் பானில் மக்ரூன் கலவையை வைக்கவும். ( ஒரொரு கப்பிலும் பாதியளவு வரும்வரை வைத்தால் போதும்)
 
350 F ப்ரீஹீட் செய்த அவன் - இல் வைத்து முப்பது நிமிடங்கள் பேக்  செய்யவும்.
 
பின்னர் வெளியே எடுத்து இரண்டு மணி நேரம் ஆற வைத்து, மக்ரூன்களை  எடுக்கவும். 
 
 

சுவையான கோக்கனட் மக்ரூன் ரெடி!

 

மகிஅருண் 

tag:Coconut Macaroons

 


Comments (10)Add Comment
...
written by hawwa, February 04, 2010
ஹாய் மகி
மக்ரூனி சூப்பராக இருக்கு மஞ்சபூவை பார்த்தவுடன் நீங்கதான் என நினைத்தேன்
தொடந்து புது குறிப்புக்களை தாங்க
...
written by tajraja, February 04, 2010
ஹாய் மஹி நலமா? குறிப்பு ஆரம்பத்திலேயே நான் கண்டுபிடித்தேன் இது மஹிதான் என்று ஊரில் இருந்து எப்ப வந்தீக புது டிஷ் எப்பவும் போலவே கலக்கல்

மஹி வரும் பின்னே மஞ்சள் பூ வரும் முன்னே
...
written by shalini, February 04, 2010
மகி நீங்க செய்கிற ஸ்வீட்ஸ் கேக் எல்லாமே சூப்பர். எலக்ட்ரிக் பீட்டருக்கு பதில் மிக்ஸியில் எக் பீட்டர் வைத்து பண்ணலாமா? அதேபோல் கேக் மிக்ஸையும் எக் பீட்டரில் மிக்ஸ் பண்ணலாமா?
...
written by zaru, February 05, 2010
அருமையான ரெசிப்பி,பாராட்டுக்கள்.மொறு மொறுன்னு பார்க்கவே ஆசையாக இருக்கு.
...
written by Mahi, February 05, 2010
நன்றி ஹவ்வா,தாஜ்,ஷாலினி & ஜாரு! smilies/cheesy.gif

நான் இதுவரை மிக்ஸி-ல எக் பீட்டர் எல்லாம் யூஸ் பண்ணதில்ல ஷாலினி..என் தோழிகள் சிலர் சொல்லிருக்காங்க, மிக்ஸி-ல பீட் பண்ணி கேக் செய்வது பற்றி! உபயோகிக்கலாம்னுதான் நினைக்கிறேன்..ட்ரை பண்ணி பாருங்க.

பை த வே, இந்த வாட்டி பூ ஆரஞ்சு கலர்ப்பா!! smilies/wink.gif ..எல்லாரும் மஞ்சள்னே சொல்லறீங்களே? smilies/sad.gif smilies/smiley.gif
...
written by NISA, February 05, 2010
wow super recipe mahismilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gifsmilies/tongue.gif
...
written by faiza, February 05, 2010
ஆரஞ்சு பூவும் அழகாக இருக்கு நீங்கள் செய்த மக்ரூனும் சூப்பராக இருக்கு மகி
...
written by Mahi, February 08, 2010
நன்றி நிஷா!
நன்றி ஃபாயிஜா!!
...
written by dharshini, February 08, 2010
பார்ப்பதற்கு மிகவும் அழகாக உள்ளது..

இதனை முட்டை இல்லாமல் செய்தால் நன்றாக வருமா மஹி?!smilies/smiley.gif
...
written by Mahi, February 08, 2010
முட்டை தான் பேக்கிங் ஐட்டம் சாப்ட்-ஆ வர மெய்ன் இன்க்ரிடியன்ட்..அது இல்லாமல் செய்யலாமான்னு தெரிலையே தர்ஷினி??
நெக்ஸ்ட் டைம் ட்ரை பண்ணிப்பார்த்து சொல்லறேன். கருத்துக்கு நன்றி! smilies/cheesy.gif
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy