வாங்க பழகலாம்

Re:Hi Friends
Arifarook 31.7.2010 12:38
Re:I am new
sri kathir 31.7.2010 6:37
I am new
veda 30.7.2010 23:38

உங்கள் கருத்து

கருத்தரிப்பதில் சிக்
hi kalai,,thanks for ur r
By: sunitha
ஒன்று யாவர்க்கும் தல
nice song
By: vijisathya
மேன்மையானவர்கள்.
சரியானது தான்....very ver
By: mofamalik
பூகம்பத்தை முன்கூட்ட
நல்ல தகவல் தந்ததற்க்கு ந
By: katheeja seyed
அரபிக் கலர் மெகந்தி
alaga irukku anal idu oru
By: sulthana7860
எறும்புக்கூட்டம் துர
Good Joke Sindhu
By: Sikaar
பாட் பெயிண்டிங்
சகோதரி, நல்ல அழகான பூ ஜா
By: Mahmoud Nona
வெஜ் லாலிபாப்
புது விதமான மாலை உணவு. இ
By: Mahmoud Nona
பறந்தன பறவைகள் [மலிக்கா] Print E-mail

பறந்தன பறவைகள்

 

 

ஒரு மரத்துக்கிளிகளாய்
ஒரே கூரையின்கீழ் வாழ்ந்த எங்களை

ஒரே ஒரு நாளின் மின்சாரத்துண்டிப்பு
ஒவ்வொரு மூளையில் தள்ளிவிட்டது

பாரதவிலாஸாய் கூடியிருந்த நாங்கள்
இப்பொழுது ஆளுக்கொகொரு
பக்கமாய் பிரிந்துவிட்டோம்.

கடல்கள் கடந்துவந்த எங்களுக்குள் ஓர் பாசப்பிணைப்புகள்

 கண்கள் பார்த்து  வார்த்தைகள் கோர்த்து-
மனங்களை இணைந்த  மகத்தான நட்புகள்

சிலநேரங்களில் பாஷைகள் புரியாதபோதும்
அகிலத்துக்கே புரிந்த பாஷையான- சிரிப்பும்
சைகைகளும் எங்களை இறுக்கி பிணைத்தன

பாலைவன ரோஜாக்களாய் பகிர்ந்துகொண்ட
பதிவுகள்தான் எத்தனை எத்தனை

சட்டென்று துண்டிக்கப்பட்ட மின்சாரத்தால்
மனங்கள் சஞ்சலங்களுக்கு ஆளானது

திசைகள் மாறியபோதும் எங்களின்
நினைவுகள் மாறிடாது

நேரங்கள் கிடைக்கும்போது ஒருநொடியாவது
கண்டுவந்துவிடனும் என எங்களுக்குள் கண்டிசன்

காலங்கள் தரும் எத்தனையோ மாற்றங்கள்
அதில் மாறாதது மாற்றம் என்ற ஒன்றுமட்டுமே

அந்த மாற்றம்போல்தான்  ”நட்பும்”

அன்புடன் மலிக்கா

 


கருத்துக்கள் (14)Add Comment
...
பதிவாளர்: zulfiyakani, June 27, 2009
அவர்கள தேடுரியோ, நல்ல தோழிகள்தன் அவங்கலெல்லாம் உனக்கு, சரி சரி அழுவாத, நான்யிருக்கென்smilies/smiley.gifsmilies/smiley.gif
...
பதிவாளர்: junfar, June 28, 2009
neenga ippa dubai yil engae irulkkireerhal?
...
பதிவாளர்: laksha, June 28, 2009
மலிக்கா,
ரொம்ப நல்லாயிருக்கு இந்த கவிதை. பாஷைகள் புரியாத போது புன்னைகை ஒன்றே நட்புக்கு கதவு திறக்கும் என்பதை அழகா சொல்லியிருக்கீங்க.
...
பதிவாளர்: sarulatha, June 28, 2009
மலிக்கா உங்கள் கவிதை மிகவும் அருமை , நட்புக்கு ஈடு எது , அருமையான வார்த்தைகள் ,
...
பதிவாளர்: SANTHOSHI, June 28, 2009
மலிக்கா! அருமையான கவிதை. பழைய நினைவுகளை தட்டிஎழுப்பிவிட்டீர்கள். இருந்தாலும் அதுவும் ஓர் சுகமே! வாழ்த்துக்கள்!
...
பதிவாளர்: malikka, June 29, 2009
ஜுனைதா, ஜுல்பியா, தாங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, ஆமாம்பா ஜுனைதா நான் துபையில்தான், தற்போது சார்ஜாவில் உள்ளேன் நீங்க எங்கு இருக்கிறீங்கsmilies/smiley.gif
...
பதிவாளர்: malikka, June 29, 2009
laksha, புன்னகைதானே ஒன்றிருந்தால் போதும் புதிய தேசத்திலும் புகுந்துவிளையாடிவிடலாம்smilies/smiley.gif ரொம்ப நன்றி laksha, உங்க சொந்த ஊர் எது?
...
பதிவாளர்: malikka, June 29, 2009
”புன்னகை ஒன்றிருந்தால் போதும்” புதிய தேசத்திலும் புகுந்துவிளையாடிவிடலாம்...அவசரத்தில் டைப்படித்துவிட்டேன்.மேலேஉள்ளதில்.

மிகுந்த சந்தோஷம் சாரும்மா தாங்களின் அருமையான கருத்துக்கு,நன்றி
...
பதிவாளர்: rammalar, June 30, 2009
malikka....கவிதை நன்றாக உள்ளது.
'புன்னகை ஒன்றிருந்தால் போதும்',. புதிய தேசத்திலும் புகுந்துவிளையாடிவிடலாம். நல்ல கருத்து.

வீட்டுக்கு வரவேற்பறை போல
மனிதனுக்குப்
புன்னகை...
------
நட்புக்குள் பொய்கள் கிடையாது
நட்புக்குள் தவறுகள் நடக்காது
நட்புக்குள் தன்னலம் இருக்காது
நட்புக்கு ஆண்பெண் தெரியாது
நட்பு என்னும் மூணெழுத்து
பூமியைக் கட்டி நீ நிறுத்து
----
குழப்பத்தில் நம்மை தெனிய வைக்கவும் நாம் பயப்படும்போது நமக்கு தைரியம் சொல்லவும், நாம் ஏமாறாமல் இருக்க எச்சரிக்கை செய்யவும், நாம் இல்லாதபோது நம்மை நினைக்கவும் நாம் மறந்ததை நமக்கு நினைவுபடுத்தவும், அசாதாரண உதவிகளை நமக்குச் செய்யவும், நாம் தவறு செய்தாலும் நம்மை விட்டுப் பிரியாமல் இருக்கவும், நாம் அழும்போது நம்மை சிரிக்க வைக்கவும் தயாராக இருப்பவர்களே நண்பர்கள்.

இதைச் சொல்லும் போதே சாமுவேல் ஜான்சன் சொன்னதை மீண்டும் ஒருமுறை தெனிவுபடுத்திக்கொள்ள வேண்டும். மேற்சொன்ன எல்லாத் தகுதிகளும் நமக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் நண்பர்கள் கிடைப்பார்கள்; கிடைப்பவர்கள் நிலைப்பார்கள். கிடைக்கவும் நிலைக்கவும் ஆவன செய்வோம்.
--------
அன்புடன்
அ.இராமநாதன்
...
பதிவாளர்: malikka, June 30, 2009
சாரு, சந்தோஷி, நட்பு என்ற ஒன்றுக்குள் நுழைந்துவிட்டால்போதும், அது நம்மை செதுக்கி சிற்ப்பமாக்கலாம், சிதைத்து சின்னாப்பின்னாமாக்கலாம்.ஒளிர்ந்து மிளிரசெய்யலாம். மிளிர்ந்ததை இருளச்செய்யலாம், எத்தகையதையும் செய்துவிடும் நட்பு.

அதை நாம் நம்பிக்கைவைக்கும் முறையைப்பொருத்து,
நட்பு என்ற நம்பிக்கைக்கு பாத்திரமாகுவதே நட்பின் சிறப்பு..

மிகுந்த மகிழ்ச்சி தோழிகளே, நீங்கள் கிடைத்திருப்பதும் ஒரு நம்பிக்கையில்தான்
என்னையும் உங்களுடன் நட்பாக்கிக்கொள்ளுங்கள், நம்பிக்கையோடுsmilies/smiley.gifsmilies/smiley.gif
...
பதிவாளர்: sarulatha, June 30, 2009
மலிக்கா நீங்கல் சொல்லும் ஒவொரு வார்த்தைகளும் உண்மை , நீங்கள் கவிஞர் அதனால் கவிதையில் உங்கள் எண்ணங்களை வடித்து விட்டீர் நட்புக்கு ஈடு எது ? ராமநாதன் சார் உங்கள் கருத்துகளும் மிகவும் அருமையாக உள்ளது . தமிழ் குடும்பம் முலம் தங்களை எல்லாம் சந்தித்தது எனக்கு மிகவும் மகிழ்சி அளிக்கிறது
...
பதிவாளர்: malikka, July 01, 2009
ரொம்ப சந்தோஷம் சார், தாங்களைபோன்றோரிடம் நல்லபெயர் வாங்குவதே
மிகுந்தமகிழ்ச்சியளிக்கிறது. தாங்கள் சொன்ன எல்லாத்தகுதிகளையும் நமக்குள் வேருண்ட கண்டிப்பாய் ஆவணம் செய்வோம்...மிக்க நன்றி
...
பதிவாளர்: sharmilaashrafali, July 08, 2009
அன்பின் மலிக்கா.உங்கள் கவிதை நன்றாக இருந்தது.வாழ்த்துக்கள்.
...
பதிவாளர்: malikka, July 08, 2009
தோழியே சர்மிளா, தாங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

அன்புடன் மலிக்கா
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form