|
ஜெர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லர் ==========================
ஜெர்மனி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர் அடால்ஃப் ஹிட்லர். 'யூதர்கள்தான் தம் நாட்டைச் சுரண்டியவர்கள்; அவர்களால்தான் ஜெர்மானியர்கள் வறுமையில் வாடுகின்றனர்' என்ற எண்ணம் கொண்டிருந்தார் அவர். ஆயிரக்கணக்கான யூத இன மக்களை விஷவாயு அறைகளில் அடைத்து மிகக் கோரமாகக் கொன்றவர். அவருக்கு ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. ஒரு சமயம் பெரிய ஜோதிட வல்லுனர் ஒருவரை அழைத்து வரச் சொன்னார் ஹிட்லர். அவரிடம், "என் ஆயுட்காலம் எப்போது முடிகிறது? நான் எப்போது சாவேன்?" எனக் கேட்டார்.
ஹிட்லரின் ஜாதகத்தை மிகத் தீவிரமாக ஆராய்ந்த ஜோதிடர், "யூதர்களின் பண்டிகையன்று நீங்கள் இறப்பீர்கள்.." என்று சொன்னார்.
ஜோதிடரின் பதிலைக் கேட்ட ஹிட்லர், "யூதர்களுக்குத்தான் வருடம் முழுதும் பல பண்டிகைகள் வருகின்றனவே... எந்தப் பண்டிகையின்போது நான் இறப்பேன் என்பதைச் சரியாகச் சொல்லுங்கள்" என்றார்.
"நீங்கள் என்றைக்கு இறக்கிறீர்களோ, அந்த நாள் யூதர்களின் பண்டிகை நாளாக நிச்சயம் கொண்டாடப்படும்..." என்றார் ஜோதிடர்.
அதன் பிறகு, அந்த ஜோதிடரின் கதி என்னவாயிற்றோ???
நன்றி: திரு.அந்துமணி - வாரமலர்.
அன்பன், அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
|
ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியின்போது அவரைப் பற்றியும் நாஜிகளைப் பற்றியும் துணிந்து ஜோக் அடித்தவர்கள் உண்டு. அவர்கள் ரகசியமாகத்தான் சிரித்தார்கள் என்றாலும் அதுவே மிக அதிகத் துணிச்சல்தான். ஜோக் சொன்னது வெளியே தெரிந்தால் மரண தண்டனைதான்.
நாஜிகளால் மிக அதிகம் பாதிக்கப்பட்ட (லட்சக்கணக்கில் கொல்லப்பட்ட) யூதர்களின் நகைச்சுவைக்கு ஒரு எ.கா.:
இரண்டு யூதர்கள் விசாரணையற்ற மரண தண்டனைக்காகக் காத்திருக்கிறார்கள். ஆனால் அவர்களை சுட்டுக் கொல்வதற்கு பதிலாக தூக்கிலிடச் சொல்லி திடீர் உத்தரவு வருகிறது.
ஒரு யூதர் இன்னொரு யூதரிடம் சொல்கிறார்: “பாத்தியா, அவங்களுக்கு குண்டெல்லாம் கொறஞ்சு போச்சு.”
---------------
ஹிட்லரின் கட்சிக்கு ‘National socialist German workers party’ என்று பெயர். சுருக்கமாக இதனை நாஜி என்பார்கள். பெயரில் சோஷலிசம் உண்டே தவிர, யதார்த்தத்தில் ஹிட்லருக்கு அதெல்லாம் அவ்வளவாகப் பிடிக்காது
------------
இரண்டாம் உலகப் போர் முடியும் தருணத்தில், தன்னைத்தானே சுட்டு ஹிட்லர் தற்கொலை செய்து கொண்டார்.
---------
மகாத்மா காந்தியின் ஒரு குணமாவது ஹிட்லரிடம் இருந்ததா? சில இருந்தது. புலால் உண்ணாமை, மது அருந்தாமை, புகைக்காமை. ஒரு வித்தயாசமான குணம் – அளவுக்கு அதிகமாக கோபம் வந்துவிட்டால், கார்ப்பெட்டை கடிப்பாராம். வித்தியாசமான மனிதர்தான்.
------------------------
அன்புடன்
அ.இராமநாதன்