வாங்க பழகலாம்
| Re:Hi Friends Arifarook 31.7.2010 12:38 |
| Re:I am new sri kathir 31.7.2010 6:37 |
| I am new veda 30.7.2010 23:38 |
ஜில்லுன்னு சில குறிப்புகள்
| விருது : சிறுகதை |
|
|
|
ரவிராஜனுக்கு நம்பவே முடியவில்லை. பின்னே என்ன… “அரங்கம்” எப்படி ஒடியது…? எப்பேர்ப்பட்ட படம்..? அவன் நடிப்பை பாராட்டாதவர்கள் யார்..? இந்த வருடம் “மகா நடிகன்” , “மிகச்சிறந்த குணச்சித்திர நடிகன்” போன்ற விருதெல்லாம் ரவிராஜனைத் தவிர வேறு யாருக்கும் வாங்கவும் தகுதி இல்லை என்று வெளிப்படையாகவே பத்திரிகை, தொலைக்காட்சி என ஒன்று விடாமல் தம்பட்டம் அடித்தனவே..! எப்படி எல்லாம் தவறானது..? ரவிராஜன் உயிரைக் கொடுத்து ‘அரங்கம்’ படத்தில் நடித்தது என்னவோ உண்மை தான்… சில ஷாட்களில் ரிஸ்க் எடுத்து நடித்ததில் வலது கை முறிந்தது ஊரே அறிந்தது. காலையில் இருந்தே போன் மேல் போன்தான்..! “என்ன ஸார்… இப்படி ஆயிருச்சே… வழக்கம் போல ஆசை காமிச்சி ஏமாத்திட்ட மாதிரி…” மறுமுனையில் டைரக்டர் தனபாலன். ரவியின் உயிர் நண்பர். உண்மையான வருத்தம் அவர் குரலில் தெரிந்தது. எதற்குமே கவலைப்படாத அவர் மனைவி கூட சற்றே கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பது மாதிரி தெரிந்தது அவருக்கு. கார் கதவைத் திற்க்கும் போது டிரைவர் பழனி முகம் கூட தொங்கின முகமாய்த் தெரிந்தார்.“எல்லாம் பாலிடிக்ஸ் ஸார்… தெரிஞ்சவங்களுக்கேக் கொடுக்கிறாங்க… எல்லாத்துக்கும் ஆளு வச்சிருக்காங்க,” என குமுறினார் மேனேஜர் ரங்கதுரை. “அப்பா..!” மகள் புவனா ஒடி வந்தாள். பத்து வயது இளம்புயல் முகத்தில் ஏகப்பட்ட உற்சாகம்… “காலேல எங்க ஸ்கூல்லே என்ன நடந்துது சொல்லுங்க. பாக்கலாம்?” கேட்டபடி செல்லமாய் தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டாள். “தெரியலையேம்மா.” ரவி தன் மகளின் முகத்தை கைகளில் ஏந்திக் கொண்டார். “அப்பா… எனக்கு ‘பெஸ்ட் ஸ்டூடண்ட் அவார்ட்’ அதாவது, சிறந்த மாணவிக்கான விருது கிடைச்சிருக்கு. என்னோட டெய்லி அட்டண்டன்ஸ், பிஹேவியர்ஸ், ஃப்ரெண்ட்ஸ் கிட்டே மூவ் பண்ணறது எல்லாம் சிறப்பாய் இருக்காம். என்னன்னவோ புகழ்ந்தாங்கப்பா இன்னிக்கு விழால!” ரவி திகைப்பாய் மகளைப் பார்த்தார். புவனா தொடர்ந்தாள். “எங்க மாரல் டீச்சர் சொன்னாங்க… ‘புவனா… உன்னோட பெற்றோர் உன்னை நல்ல விதமா வளர்த்ததால் தான் உனக்கு இப்படி ஒரு அவார்ட் கிடைச்சது. நீ அவங்களுக்கு நன்றி சொல்லணும்’னாங்கப்பா… தாங்க்ஸ்ப்பா!” புவனா சொல்லிக்கொண்டே தன் கையிலிருந்த ஷீல்டை தந்தையிடம் கொடுத்தாள். காலைத்தொட்டு வணங்கினாள். ரவிக்கு தான் எதிர்பார்த்த “மகா நடிகன் “, ‘குணச்சித்திர நடிகன்’ என்கிற பட்டமெல்லாம் தன் காலடியில் கிடப்பது மாதிரி இருந்தது.vikatan/ p>அன்புடன்-அ.இராமநாதன்
Bookmark
நண்பர்களுக்கு அனுப்ப
கருத்துக்கள் (1)
![]()
Type in
(Press Ctrl + g to toggle)
உங்கள் கருத்து
|





