சேறு அகன்றது (1) Print E-mail

நீண்ட நாட்களாகவே கதை எழுத வேண்டும் என்று ஆசை... சிற்சில காரணங்களால் அது தடைப்பட்டு கொண்டேயிருந்தது... இப்போது அதை தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

சேறு அகன்றது...

அது ஒரு அழகிய மாலை நேரம்.. ரவி தனது காரை செலுத்திக்கொண்டே பக்கத்தில் இருந்த தன் புது மனைவி பூஜாவை ரசித்தான். போன வாரம்தான் அவர்களுக்கு திருமணம் முடிந்தது. அந்த நகரின் பெயர் சொல்லும்படியான ஒரு தொழிலதிபரின் மகள். ரவி மேலாளராக பணிபுரிந்த கார் நிறுவனத்திற்கு பூஜா வந்திருந்த போது இருவரின் கண்களும் மனங்களும் சந்தித்து திருமணத்தில் முடிந்தது.. பூஜா ஒரே பெண் ஆகையால் அவளின் அப்பா சம்மதம் கிடைத்தது.. ரவிக்கு யாரும் கிடையாது.அவனது நண்பர்கள் உதவியோடுதான் அவன் படித்தான். அவன் நண்பன் செல்வம் தான் அவனுக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்தான். ஆனால் காலத்தின் கட்டாயமும், இப்போது இருக்கிற வசதியும் அவனை அவர்கள் கண்ணில் படாத அளவுக்கு ஆக்கியிருந்தது...

                                                                                                                                                                            - தொடரும்..

பாக்யா...

tag:Tamil Navel Collection


 
Feedback Form