| சேறு அகன்றது--3 |
|
|
|
இதுவரை: ரவியின் கார் அந்த நகரின் மிகப்பிரபலமான ஜவுளிக்கடையின் முன் வந்து நின்றது.. காரின் கதவை திறந்து கொண்டு இறங்கினான் ரவி.. மனைவியை லேசாக அணைத்தபடியே உள் நுழைந்தவனை கடையின் முதலாளி எதிர்கொண்டு வரவேற்றார்...'வாங்க சார், வாங்க மேடம்.. என்ன பாக்கணும் சார்..ஒரு போன் பண்ணியிருந்தா வீட்டுக்கே அனுப்பியிருப்பேனே சார்..என்று பல்லைக் காட்டியவரை ஏளனத்துடன் பார்த்த ரவி,' இட்ஸ் ஓகே...சேரி செக்சன் எது? என்றவாறே உள் நுழைந்தான்..அவனுக்கு முன்னால் ஓடிய முதலாளி பணிப்பையனை அனுப்பி விட்டு தானே சேலைகளை எடுத்துக்காண்பிக்க ஆரம்பித்தார்.. இனி: இருப்பதிலேயே விலை அதிகமான சேலையை கையில் எடுத்தவன் தனது மனைவியின் பக்கம் திரும்பி ''டார்லிங்.. இது உனக்கு பிடிச்சிருக்கா? என்றான்.. அவன் மனைவி அதை கையில் வாங்கி ஏற்கனவே இதே டிசைன்-ல வச்சிருக்கேன் பா..என்றவள், இதை வேணும்னா எடுத்துக்கிறேன்'' என்று அருகில் கிடந்த மற்றொரு சேலையை எடுத்தாள். வெடுக்கென அதை அவள் கையிலிருந்து பிடுங்கியவன் அதன் விலையை பார்த்தான். முதலில் எடுத்த விலையை விட கொஞ்சம் குறைவாக இருந்தது கண்டு முகம் சுணங்கினான்..'' நோ..டார்லிங் நான் உனக்கு எப்பவும் பெஸ்ட்டா தான் செலக்ட் பண்ணுவேன்... இந்த கடையிலியே விலை அதிகமானதை தான் நாம் வாங்கனும்..அதுதான் நம்ம பிரஸ்டீஜ்-க்கு நல்லது..சரியா? என்று மனைவியின் முகத்தை பார்க்காமலே கூறியவன், கடைக்காரரிடம் திரும்பி ''இதை பில் பண்ணிருங்க என்றவாறே தனது கோட் பாக்கெட்டின் உள்ளிருந்து 500 ரூபாய் கட்டு ஒன்றை எடுத்து அவரிடம் அசால்ட்டாக நீட்டினான்.. அவரும் மிகவும் பம்மியவாறே அதை வாங்கி கொண்டு கேஷ் கெளண்டருக்கு ஓடினார். அவரது அவசரத்தை மனதுக்குள் எண்ணி மகிழ்ந்தவாறே மனைவியிடம் திரும்பி என்னடா.. சேரி உனக்கு ஓகே தானே என்றவாறு கண்ணசைத்தான்..மனதுக்குள் மருகினாலும் சிரித்தபடி தலையசைத்தாள் மனைவி.என்னதான் பணக்காரக்குடும்பத்தில் பிறந்தாலும் ஆடம்பரத்தை அதிகம் விரும்பாதவள் அவள். எல்லா விசயங்களிலும் இருவருக்கும் ஒத்து போனாலும் அவனுடைய இந்த குணம் மட்டும் அவளுக்கு பிடிக்காமல் போனது.. இருந்தாலும் சில நாட்களில் சரியாகி விடுவான் என்று பொறுமையாக இருக்கிறாள்தொடரும்.... பாக்யா tag:Tamil Navel Collection
|


