சேறு அகன்றது- 4 Print E-mail

முன்கதை சுருக்கம்: நடுத்தரகுடும்பத்தை சேர்ந்த ரவிக்கும், தொழிலதிபர் மகள் பூஜாவுக்கும் காதல் திருமணம் நடக்கிறது.. ரவி பணம் இருக்கும் மமதையில் தலை கால் புரியாமல் ஆடுகிறான்.. அவனது மனைவி அவன் திருந்தும் நாளுக்காக காத்திருக்கிறாள்..

இனி....

கடைக்காரர் கொடுத்த மீதிப்பணத்தை கூட வாங்காமல் வேகமாக வாயிலை நோக்கி நடக்கிறான் ரவி.. பூஜா அதை வாங்கிக் கொண்டுஅவனுக்கு இணையாக நடக்கிறாள்.. அவன் வாசலை தாண்டியதும் கடைக்காரர் மட்டுமல்ல அவரின் அருகில் இருந்த ஊழியரின் உதடுகளிலும் கேலிப்புன்னகை... 2 வருடங்களுக்கு முன்பு இதே ரவி தனது நண்பர்களுடன் இதே கடைக்கு வந்திருக்கிறான்.. வந்தவுடன் நேராக குறைந்த விலை துணிகள் உள்ள பகுதியை தேடிச்செல்வான்.. எடுத்த துணிகளுக்கும் விலையை குறைக்க சொல்லி சண்டை போடுவான். அதை நினைத்து பெருமூச்செறிந்த கடைக்காரர் தனது ஊழியரிடம்,'' ஹூம்.. இவனுக்கு வந்த வாழ்வை பாருடா.. அந்த பொண்ணுக்கு இருக்குற பொறுமை கூட இவனுக்கு இல்லை..புதுசா பணம் வந்தா பழசெல்லாம் மறந்திடுமோ.. நமக்கு தெரியாதா இவனோட வகுசி... அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பானாம்..எல்லாம் விதி..என்று பேசிக்கொண்டே போனவர் சட்டென அமைதியானார்..அவரது அமைதிக்கு காரணம்....

தொடரும்

பாக்யா...

tag:Tamil Navel Collection


 
Feedback Form