| சேறு அகன்றது - 5 |
|
|
|
முன்கதை சுருக்கம்: நடுத்தரகுடும்பத்தை சேர்ந்த ரவிக்கும், தொழிலதிபர் மகள் பூஜாவுக்கும் காதல் திருமணம் நடக்கிறது.. ரவி பணம் இருக்கும் மமதையில் தலை கால் புரியாமல் ஆடுகிறான்.. அவனது மனைவி அவன் திருந்தும் நாளுக்காக காத்திருக்கிறாள்.. இனி.... பேசிக்கொண்டே போன ஜவுளி கடை முதலாளி சடன்பிரேக் போட்டார்போல் ஸ்தம்பித்துப்போய் கடை வாசலை நோக்கினார்.. அங்கே தீப்பிழம்பான கண்களோடு நின்றிருந்தான் ரவி. " என்ன மிஸ்டர் எவ்வளவு தெனாவட்டு இருந்தா என்னைப்பத்தி இப்படி பேசுவ? என்று கடைக்காரரை நோக்கி பாய்ந்தான்..முதலில் அதிர்ந்த கடைக்காரர்..என்ன சார் பாய்றீங்க.. என்ன இல்லாததை சொல்லிட்டேன் என்றார்.. கோபம் தலைக்கேறிய ரவி நிதானம் இழந்தான்..கடைக்காரரின் சட்டையை பிடித்து அவரது கன்னத்துல் அறைந்தான். அது வரை பொறுமை காத்து நின்ற கடை ஊழியர்கள் ரவியின் மேல் பாய்ந்தனர். கூலிங்கிளாஸை மறந்து விட்டு எடுக்க மறுபடியும் கடைக்குள் சென்ற கணவனை காணாத பூஜா காரை விட்டு இறங்கி கடைக்குள் நுழைய எத்தனித்த வினாடி ரவியை தள்ளியவாறே கடை முதலாளி வெளிவந்ததை பார்த்தவளுக்கு பெரும் அதிர்ச்சி..என்ன சார் நடக்குது இங்க.. ஏன் அவரை தள்ளிட்டு வரிங்க.. விடுங்க சார் அவரை..என்று அவரின் பிடியிலிருந்த ரவியை விடுவிக்க முயன்றாள். இத பாரும்மா..உங்கப்பா முகத்துக்காகவும், உன் குணத்துக்காகவும் தான் இவனை விடுறேன். இவன் செஞ்ச காரியத்துக்கு இவனை போலீஸ்-ல ஒப்படைக்கணும்.. மாமனார் சொத்துல திங்கரவனுக்கே இவ்வளவு திமிருனா..உழைச்சி சம்பாதிச்ச எனக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்..என்று பேசிக்கொண்டே போனவரை இடைமறித்த பூஜா " என்ன நடந்தது ரவி?' என்று கணவனைப் பார்த்து கண்ணீர் மல்க கேட்டாள்.. வேண்டாம் பூஜா..ஒண்ணும் பேச வேண்டாம்.. வா போகலாம்.. என்று அவளை அழைத்துக்கொண்டு கடைக்காரரை முறைத்தவாறே வெளியேறினான்.அவனது முறைப்பை அலட்சியம் செய்தவாறு உள்ளே சென்ற கடைக்காரர் யாரும் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு தன் மொபைலை எடுத்து கிசுகிசுப்பாக பேசத்தொடங்கினார்.." நாந்தான் பேசறேண்டா.. நீ சொன்ன மாதிரியே செஞ்சிட்டேன்..என்ன பையன் கொஞ்சம் கை நீட்டிட்டான்..பரவாயில்லை டா...உனக்காகத்தானே எல்லாம்.. சரிடா அடுத்து என்னன்னு போன் பண்ணி சொல்லுடா..சரி வைக்கிறேன்.. என்றவாறே போனை அணைத்தவரின் முகத்தில் வெற்றிக்களிப்பு.. தொடரும் பாக்யா.... tag:tamil-navel-collection-5
|


