குறிப்புகள் கதம்பம்

அனைத்து குறிப்புகளையும் ஒரு சேர காணும் இடம்

 

 

பல்லாயிரம்  மைல்தாண்டி பரிதவிக்குது மனசு...

சில ஆயிரம் பணத்திற்காக,

பல ஆயிரம் மைல்தாண்டி,

முந்தய  பாலை நிலமாம்,

இன்றைய  சோலை நிலமான,

நானிலத்தின் தாயகம்,

நமது நபிகள் நாயகம்(ஸல்) அன்னாரின்,

பிறந்த  மண்ணாம் சௌதி நாடி வந்தேன்.

ஓடினவே  பதினான்கு ஆண்டுகள்,

நான்காண்டிற்கு  முன்பு என்

நற் தந்தையை  இழந்தேன்,

இறுதியில் கூட முகத்தைப் பார்க்க

முடியா  அவல நிலை,

ஈர் மாதங்கள் முன்பு எமைப்பெற்றெடுத்த,

தாயையும்  இழந்தோம்,இரண்டு தினங்களுக்குள்,

தாயகம்  விரைந்தேன்,காண முடிந்ததோ,

அன்னையின் மண்ணறையை (கப்ரை)மட்டுமே,

ஒன்றை இழந்தால் மட்டுமே ஒன்றைப்பெற,

முடியும்  என்பது நியூட்டனின் இரண்டாம் விதி,

நான் வாழ்ந்த  இந்தகாலத்தில் எதை இழந்தாய்,

எதைப் பெற்றாய் எனக் கேட்கிறது எனது மதி,

கல்லின் உள்ளிருக்கும் தேரைக்கும்,

உணவளிக்கும் கருணைக்கடலாம் வல்ல அல்லாஹ்வே,

நமக்கு  என்றென்றைக்கும் துணை இருப்பான்,

எல்லோருக்கும் நல் வாழ்வளிப்பான்.
 


அன்புடன்,-எஸ்.ஏ.இபுறாஹிம்

அல்-ஜுபைல்,சௌதி..



Tagged in: Untagged 
கருத்துக்கள் (5)Add Comment
...
பதிவாளர்: hawwa, March 08, 2010
படித்தவுடன் மனது கஷ்டமானது
கவலைவேண்டாம் அவர்களது ஆசிர்வாதம் உங்களை நன்றாக வாழவைக்கும்
...
பதிவாளர்: abuabsar, March 09, 2010
எம் துயரத்தில் பங்குகொண்ட சகோதரி ஹவ்வா அவர்களுக்கு மிக்க நன்றி......

மேலும் இக்கவிதையை பதிவு செய்த அன்பினிற்கினிய சகோதரர் தமிழ் நேசனுக்கும் பல்லாயிரம் நன்றி உரித்தாகுக.

நேசத்துடன்,
எஸ்.ஏ.இபுறாஹிம்

அல்-ஜுபைல்,சௌதி..


...
பதிவாளர்: zuhara, March 09, 2010
பொறுமையை கையாளுங்கள் சகோதரரே,அல்லாஹ் ஹைரை நாடுவான்.மேலும் கல்லின் உள்ளிருக்கும் தேரைக்கும்,

உணவளிக்கும் கருணைக்கடலாம் வல்ல அல்லாஹ்வே,

நமக்கு என்றென்றைக்கும் துணை இருப்பான்,

எல்லோருக்கும் நல் வாழ்வளிப்பான்.இன்ஷா அல்லாஹ்

...
பதிவாளர்: NISA, March 09, 2010
நல்ல வார்த்தைகள்
நான் வாழ்ந்த இந்தகாலத்தில் எதை இழந்தாய்,

எதைப் பெற்றாய் எனக் கேட்கிறது எனது மதி,
...
பதிவாளர்: nizamudeen, March 10, 2010
கவிதையினூடே காணப்படும் தத்துவங்களும்
சோகங்களும் மனதை கலங்கவைத்தன.
அல்லாஹ்தான் அனைத்தும் அறிவான்.
நாம் அவனிடமே சரணடைகிறோம்.
அவனே நமக்கு அமைதியும் அளிப்பான்.
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
Feedback Form