தேவையான பொருட்கள்:
எம்சீல்
டைல்ஸ்
ஃபேப்ரிக் கறுப்பு கலர்
கோல்ட் பவுடர்
செராமிக் பவுடர்
ஃபெவிக்கால்
ஸ்பாஞ்ச்
முதலில் டைல்ஸை நன்றாக கழுவிகாயவைத்து கொள்ளவும்,செராமிக் பவுடரில் சிறிது ஃபெவிக்காலும் தண்ணீரும் சேர்த்து நன்றாக குழைத்து டைல்ஸில் சிறிது சிறிதாக தடவிகொண்டேவரவும்
.முழுவதும் தடவி நன்றாக காயவைக்கவும்
இப்பொழுது எம்சீலை நன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி ஒவ்வொன்றையும் திலகம் யிபோல் செய்து நடுவில் கத்தியில் அழுத்தினால் படத்தில் உள்ளது போன்று வரும்.
இப்பொழுது பூக்கள் போல் அடுக்கி ஃபெவிக்காலின் உதவியில் ஒட்டவும்,அனைத்தும் நன்றாக காய்ந்ததும் கருப்பு ஃபேப்ரிக் கலர் கொடுக்கவும்,
லேசாக காய்ந்ததும்(சிறிது ஈரம் இருக்கவும்) கோல்ட் பவுடரை ஆங்காங்கே தூவி
ஸ்பாஞ்சில் ஒற்றி எடுக்கவும். பூக்களுக்கு மட்டும் முழுவதுமாக கோல்ட் பவுடரை தடவிவிடவும்.
அழகிய வால்ஹேங்கிங் ரெடி. இது பார்ப்பதற்கு ரிச்லுக்காக இருக்கும்.
நட்புடன் தர்ஷினி

| < Prev | Next > |
|---|

