நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா? Print E-mail

 
""நேத்து உன்னைத் தேடி உன் வீட்டுக்கு வந்தேன். உன்னை எங்கேன்னு உங்க அப்பாகிட்ட கேட்டதற்கு "அந்தமாடு எங்க மேயுதோ?'ன்னு சொன்னாருடா. உனக்கு உன் வீட்டில் மரியாதை அவ்வளவுதானா?''

""ஓகோ... உன்னைத் தேடி ஒரு கழுதை வந்திச்சின்னு சொன்னாரு... அது நீ தானா?''
 
================================================
 

நீதிபதி : உங்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கிறேன். ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா?

சர்தார் : தூக்குதண்டனை தானே… சீக்கிரம் கொடுங்கள். எத்தனை கிலோ தூக்க வேண்டும் என்று சொன்னால், தூக்கிவிட்டு நான்பாட்டுக்கு வீட்டுக்கு நடையைக் கட்டுவேன்.

================================================

மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.

" நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள் " என்று கூறிவிட்டு , " யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.

நோயாளி மெல்லிய குரலில் " ஆம் " என்றார்.

" யாரை? "

" வேறொரு நல்ல மருத்துவரை..."

================================================

ரெண்டு சர்தார்ஜி மாணவர்கள் அமெரிக்க விண்வெளி வீரர்களைப் பத்திப் பேசிட்டு இருந்தாங்களாம்.

ஒருத்தரு சொன்னாராம்"என்னய்யா நெலாவுல எறங்குறது என்ன பெரிய விஷயமா…அமெரிக்கா காரன் பெருசா என்னத்த சாதிச்சிட்டான்? நாம சர்தார்ஜிக்கள். நாம நேரடியா சூரியன்ல போய் எறங்குவோம்"அப்படின்னாராம்.

அதுக்கு ரெண்டாவது சர்தார்ஜி சொன்னாராம்"சூரியன்லேருந்து 13மில்லியன் மைல் தொலைவுல இருக்கும் போதே நாம பொசுங்கிடுவோம்"அப்படின்னாராம்.

அதுக்கு மொதல் சர்தார்ஜி "இருந்துட்டு போவுது…அதுக்கென்ன? நாம ராத்திரில போவோம்"அப்படின்னாராம்.

================================================

இரவு பத்து மணி. அந்த பெரிய பங்களாவின் போன் அலறியது. வீட்டில் வேலைக்காரியும், நோயாளியான அவ்வீட்டுப் பெண்ணையும் தவிர யாருமில்லை. வேலைக்காரி ஓடிவந்து போனை எடுத்தாள்.

""நான் வீட்டு முதலாளி பேசுறேன். நான் சொல்றதை நீ செஞ்சேனா ஒனக்குப் பத்துலட்சம் தருவேன்''

""ஐயா, சொல்லுங்க ஐயா...நீங்க சொல்றதைச் செய்யத்தான் ஐயா நானிருக்கேன்.''

""ரூம்ல என் வொய்ஃப் படுத்திருப்பா. ஒரு டின் கெரசினை அவள் படுக்கையில் ஊற்றி தீ பற்ற வை. நான் வெயிட் பண்றேன்.''

""ஐயா....''

""பத்துலட்சம் வேணுமின்னா செய். நான் போன்ல வெயிட் பண்றேன்''

""அய்யா நீங்க சொன்னபடியே செஞ்சுட்டேன்''

""வெரி குட். இப்ப நீ வீட்டின் முன்கதவைப் பூட்டிட்டு பின் வாசல் வழியாக வெளியேறு.''

""ஐயா, நம்ம வீட்டுக்கு ஒரு வாசல்தான இருக்கு?'

""அடடா... ஸாரி... ராங் நம்பர்''

===============================================
பாண்டு : ஜோ, நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
ஜோ : ம்ம்ம்….ஏழு சாப்பிடுவேன்.
பாண்டு : அட மக்கு, முதல் சப்பாத்தி சாப்பிட்டப் பிறகு, அத வெறும் வயிறுன்னு சொல்ல முடியாதே!! அப்புறம் எப்படி ஏழுன்னு சொல்லுவ!!!
ஜோ : அதானே!!!!

(வீட்டுக்குச் சென்றவுடன், மனைவியிடம்…)

ஜோ : நீ வெறும் வயித்துல எத்தனை சப்பாத்தி சாப்பிடுவே?
மனைவி : அதுக்கென்ன….அஞ்சு சாப்பிடுவேன்.
ஜோ : ஓ!!! நீ மட்டும் ஏழுன்னு சொல்லிருந்தா உனக்கு ஒரு சூப்பர் பதில் சொல்லிருப்பேன். சே!
===============================================
அன்புள்ள மகன்:

நான் இன்னமும் உயிரோடு தான் இருக்கின்றேன் என்று தெரிவிப்பதற்காக சில வரிகள்...

உனக்கு சரளமாக எதையும் வாசிக்கத் தெரியாது (எழுத்துக் கூட்டித் தான் வாசிப்பாய்) என்று எனக்குத் தெரியும் ஆதலால் நான் இக் கடிதத்தை மிகவும் மெதுவாகத் தான் எழுதுகின்றேன். இனி நீ வரும் போது உனக்கு எங்கள் வீட்டுக்கு வழி தெரியாது, ஏனெனில் நாங்கள் இப்போது வேறு வீட்டில் இருக்கின்றோம்.

உனது தந்தையை பற்றி........ அவருக்கு இப்போது அருமையான ஒரு வேலை கிடைத்துள்ளது. அவருடைய வேலையில் அவருக்குக் கீழ் 500 பேர் இருக்கிறார்கள். அவருடைய புதிய வேலை மயானத்தில் புல் வெட்டுவது.

இந்தப் புது வீட்டில் ஒரு துணி தோய்க்கும் இயந்திரம் இருக்கின்றது. ஆனல் அது சரியாக வேலை பார்ப்பதேயில்லை. போன வாரம் 14 மேல் சட்டைகளைப் போட்டு சங்கிலியையும் இழுத்து விட்டேன். அந்த வினாடியிலிருந்து 14 சட்டைகளையும் இன்னும் காணவில்லை.

இன்று காலை உனது சகோதரி மேரிக்கு குழந்தை பிறந்தது; ஆனால் இது வரை அது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்று எனக்குத் தெரியாது. அதனால் இப்போது நீ அத்தையா அல்லது மாமாவா என்று சரியாகச் சொல்லமுடியவில்லை.

கிறிஸ்துமஸுக்கு உன் அப்பாவுக்கு போதுமான அளவு குடிவகை இல்லை; ஒரு பைண்ட் பியரில் நான் ஒரு போத்தில் காஸ்டர் எண்ணெயை ஊற்றிவிட்டேன். அது அவரை புது வருடம் வரைக்கும் தாக்குப் பிடித்தது.

வியாழக் கிழமை நான் வைத்தியரிடம் அப்பாவுடன் போனேன். அங்கே வைத்தியர் என் வாயில் ஒரு சிறு கண்ணாடி குழாயை வாயில் போட்டு 10 நிமிடத்துக்கு வாயைத் திறக்க வேண்டாம் என்று சொன்னார். அதனால் உன் அப்பா வைத்தியருக்கு இன்னுமொரு குழாய்
வாங்க பணம் கொடுத்தார்.

இந்த வாரம் 2 தடவை தான் மழை பெய்தது. முதல் தரம் 3 நாளும் இரண்டாவது தடவை 4 நாளும் பெய்தது. எமது கோழிகள் ஒரே முட்டையை 4 தடவை இட்டன, காரணம் திங்கள் கிழமை ஒரே காற்றாக இருந்ததாலோ என்னமோ.

உன் பாட்டியின் மயான நிலத்துக்கான தவணைப் பணத்தை இன்னும் 7 நாட்களுக்குள் கட்டாவிட்டால் பாட்டியை வெளியே வந்துவிடுவாள் என்று நேற்று கடிதம் வந்தது.

வேறு விஷயம் எதுவும் இல்லை.

இங்ஙனம்

உன் அன்பான அம்மா.


பிற் குறிப்பு:

நான் உனக்கு $ 10.00 இத்துடன் அனுப்ப இருந்தேன். ஆனால் அதற்குள் கடிதத்தை ஒட்டிவிட்டேன்.


*(ஒரு போலிஷ் நாட்டுத் தாயின் கடிதம். மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.)*

===============================================
நண்பா நீ கம்ப்யூட்டர் முன்னாடி உட்காந்தா, அது என்ன நினைக்கும் தெரியுமா?

Intel inside
Mental outside !!!
===============================================

 

 
சுட்டது...
 
ப்ரியத்துடன்,
 
கோகுல்


Comments (3)Add Comment
...
written by Julee, March 24, 2008
Gokul, Good Jokes paa...Keep up the great work.
...
written by Mrs,seyed, March 15, 2009
ரெம்ப சூப்பராக இருந்தது கோகுல்smilies/grin.gifsmilies/grin.gifsmilies/grin.gifsmilies/cheesy.gif
...
written by vinoarun, August 27, 2009
gokul it is very nice pa
Type in (Press Ctrl + g to toggle)

Write comment
You must be logged in to post a comment. Please register if you do not have an account yet.

busy