அப்பா அப்பப்பா!!!! Print E-mail

 

4வயதில்--"எங்கப்பா போல ஒரு ஆளைப் பார்க்கவே முடியாது."

6---"அவருக்கு எல்லா விஷயமும் அத்துபடி"

10---"தங்கமானவர்.ஆனால் பொசுக் பொசுக்கு கோபம் வந்திடும்.
          மிட்டாய் தின்னதுக்காக என்னை அடிச்சிட்டாரு."

12---"நான் சின்னப்பிள்ளையா இருந்தபோது,
         என்னை நல்லா கவனிச்சிக்கிட்டாரு

14--"அவருக்கு சீக்கிரம் திருப்தியே வராது,நாப்பது மார்க் எடுத்தால் அய்ம்பது
        எடுக்கணும்பாரு.99மார்க் எடுத்தாகூட--ஒரு மார்க்கை ஏன் கோட்டை விட்டே'ம்பாரு'

16---என்னைச் சுத்தி என்ன நடக்கிதுங்கிரதை புரிஞ்சிக்கவே மாட்டேன் என்கிறாரு.
      பழங்காலத்து மனுஷனாவே இருக்காரு."

18---"எடுத்தேன் கவிழ்த்தேன்னுதான் எல்லா நடவடிக்கையும்."

20---"அப்பப்பா,அந்த மனுஷனை புரிஞ்சுக்கவே முடியல.
       அம்மா எப்படிதான் காலம் தள்ளறாங்களோ?"

25---"எது கேட்டாலிம் 'கிடையாது','இல்லை','கூடாது'ங்கிற பேச்சுதான்.
        இவரெல்லாம் ஒரு மனுஷனா?"

30--என் பையனை சமாளிக்கிறது கஷ்டமா இருக்கு.
     என்னை எங்கப்பா எப்படித்தான் சமாளிச்சாரோ?"

40--"என்னை எங்கப்பா எவ்வளவு ஒழுக்கத்தோட,
      கட்டுப்பாட்டோட வளர்த்தார் தெரியுமா? அதனால்தான்,இந்தளவு நல்லா இருக்கேன்."

45--"எங்கப்பாவை நினைக்கும்போது ரெம்ப பெருமையா இருக்கு."

50--"ஒருத்தனை மேய்க்கிறதுக்கு எவ்வளவு சிரமப்படறேன்?நாங்க மூன்று பேரு.
       ஒரு அண்ணன் மற்ற தம்பி அத்தனை பேரையும் கட்டுக்கோப்பா வளர்த்தார் எங்கப்பா.
         அவர் கிரேட்."

55--"ஒவ்வொரு விஷயத்தையும் திட்டம் போட்டு முடிக்கிறதுல அவரை மிஞ்ச
        ஆளே இல்லை."

60---"எங்கப்பா போல ஒரு ஆளை பார்க்கவே முடியாது."

(நான்கு வயதில் நாம் சொன்னது சரிதான் என்பதை உணர்வதற்குள்
 56ஆண்டுகள் ஓடி விடுகின்றன).

 

 


கருத்துக்கள் (4)Add Comment
...
பதிவாளர்: Julee, March 24, 2008
Nice Nice...Simply Superb...Anything you have abt amma ???
...
பதிவாளர்: Jaleela, March 24, 2008
வாவ் ராஜிவ்//
நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை
ஒருகால கட்டத்தில் தான் நினைத்து வருந்துகிறோம்.
அம்மவை பற்றி கேட்கவே தேவையில்லை என்னேரமும் நம் முன்னேற்றத்திற்காக வேண்டுபவள்.
அம்மாவிற்கு இனையாக இந்த உலகில் வேறு எதுவுமே ஈடு இணை கிடையாது.
ஜலீலா
...
பதிவாளர்: abusali2002, March 26, 2008
எல்லாமே வேடிக்கைதான்...அது தனக்கேற்படும் வரை
ஒரு சமயம் எங்கோ படித்தது...
இதை படிக்கும் போது நினைவில் வந்தது....
அருமையான வாக்கியங்கள்.
நன்றி நண்பரே... பணி தொடரட்டும்.
_அபுசாலி :zzz
...
பதிவாளர்: kavithadevi, February 06, 2010
உண்மை தான். நாம் அனுபவிக்கும் போது தான் தெரியும். நீங்கள் எழுதிய அனைத்தும் நிதர்சனமான உண்மை. நன்றி... இன்னும் தொடர வாழ்த்துக்கள்.
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form