அபுதாபியில் சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி Print E-mail
'சீமான்' 10ம் ஆண்டு விழா
 
  ஷார்ஜா: சீமான் எனப்படும் ஷார்ஜா இஸ்லாமிக் மெட்ராஸ் அசோசியேஷன் அமைப்பின் 10ம் ஆண்டு விழா 28ம் தேதி மாலை நடைபெறவுள்ளது.

ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவில் பல தன்னார்வத் தொண்டுகளையும், மதம் சம்பந்தப்பட்ட பல நிகழ்ச்சிகளையும் திறம்பட செய்து வரும் ஷார்ஜா இஸ்லாமிக் மெட்ராஸ் அசோசியேஷன் அமைப்பு தனது 10வது ஆண்டு விழாவை வருகிற 28ம் தேதி கொண்டாடவுள்ளது.

துபாயில், கிஸல் பகுதியில் உள்ள லூலூ ஹைப்பர் மார்க்கெட் அருகே (அல்முல்லா பிளாஸா பின்புறம்) உள்ள துபாய் ஸ்காலர் தனியார் பள்ளியின் உள்ளரங்கத்தில் 28ம் தேதி மாலை 4.30 மணிக்கு விழா நடைபெறுகிறது.

சீமான் செயற்குழு உறுப்பினர் மெளலவி ஜே.எஸ்.எஸ். அலி பாதுஷா மன்பா திருமறை வசனம் ஓதி விழாவினை தொடங்கி வைப்பார்.

விழாவுக்கு அல்ஹாஜ் ஏ.எம். நூருல் அமீன் தலைமை தாங்குகிறார். ஏ.ஏ.ரஹ்மான் வரவேற்பு நிகழ்த்துவார்.

விழாவில் சீமான் ஆண்டு விழா நினைவு மலர் வெளியிடப்படுகிறது. மலரினை இடிஏ நிறுவனர் பி.எஸ்.அப்துல் ரஹ்மானின் துணைவியார் டாக்டர் ரஹமதுன்னிஸா அப்துல் ரஹ்மான் வெளியிடுவார்.

முக்கிய உரையினை, கீழக்கரை தாசம் பீவி அப்துல் காதர் பெண்கள் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.சித்தி சுமையா நிகழ்த்துவார்.

மதுரை சீதக்காதி அறக்கட்டளை துணைப் பொது மேலாளர் ஜனாப் எஸ்.ஷேக் தாவூத் கான் வாழ்த்துரை வழங்குவார்.

கவிஞர் அபிவை, தாஜூதீன், ஏ.எஸ்.தாஜூதீன், கம்பம் முகம்மது பாக்கவி ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துவர்.

நிகழ்ச்சியில், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகள் பங்கு பெறும் கிராஅத் மற்றும் பேச்சுப் போட்டியும் நடைபெறவுள்ளது. இதற்கான நடுவர் குழுவில் காஞ்சி மெளலவி அப்துர் ரவூப் பாக்கவி, முதுவை மெளலவி பஷீர் சேட் ஆலிம் இடம்பெறுகின்றனர்.

சீமான் தலைவர் முகம்மது மாலிக் நன்றியுரை வழங்குவார். நிகழ்ச்சியினை ஏசியாநெட் வானொலி தமிழ் அறிவிப்பாளர் ஆசிப் மீரான்  தொகுத்து அளிப்பார்.

மேலும் விவரங்களுக்கு மாலிக் 050-6965890, 055-8452178 மற்றும் ரஹ்மான் 050-7246456 ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
அபுதாபியில் சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபியில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி நடக்கிறது,
 
அபுதாபியில் உள்ள கேரள சோஷியல் சென்டரில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் 4ம் தேதி நடக்கிறது.

அல்ஹம்துலில்லாஹ் எனும் தலைப்பில் நடைபெற இருக்கிறது.  காலை 9 முதல் 12 வணி வரை நடைபெறும். நிகழ்ச்சியை ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
 
முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு 050 6142633 / 050 4567487 / 050 315 6141 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
 




Source: Oneindia

கருத்துக்கள் (1)Add Comment
...
பதிவாளர்: aamilah, December 10, 2008
wht is the date to participate in programme.
Type in (Press Ctrl + g to toggle)

உங்கள் கருத்து
smaller | bigger

busy
 
Feedback Form