உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!
அழகான புருவங்களுக்கு
அழகான புருவங்களுக்கு புருவங்களைப் பொறுத்தவரை பலருக்கும் பலவிதப் பிரச்னைகள்.
சிலருக்கு அடர்த்தி குறைவாக இருக்கும். இன்னும் சிலருக்கு புருவ ரோமங்களின் நிறம் வேறு மாதிரியாக இருக்கும். ஒரு சிலருக்குப் புருவங்களில் புழுவெட்டு ஏற்பட்டு, ஒரு சில இடங்களில் முடி உதிர்ந்து போயிருக்கும். புருவங்களில் பேன்கள் கூட சிலருக்கு வரலாம். இவையெல்லாம் புருவங்களை சுத்தமாகப் பராமரிக்காததால் ஏற்படும் விளைவுகள்.- அழகான புருவங்களைப் பெற விரும்புவோருக்கு...பொதுவான ஆலோசனைகள்
- தினம் ஒரு முறையாவது புருவங்களை மசாஜ் செய்து விட வேண்டும்.
- கண்களுக்கான மசாஜ் செய்யும்போது புருவங்களில் ரோம வளர்ச்சி அதிகரிக்கும்.
- சிலருக்குத் திடீரென ஒரு புருவத்தில் அதிக முடி இருக்கும். இன்னொன்றில் குறைவாக இருக்கும். அவர்களுக்குக் கண் பார்வைக் கோளாறுகள் இருக்கக் கூடும். எனவே அவர்கள் முதலில் அதற்கு சிகிச்சை மேற் கொள்ள வேண்டும்.
வறண்ட சருமம் புத்துயிர் பெற
இளமையாக இருக்க:
- தினமும் ஒரு வேளை சிறிது எலுமிச்சைசாறு, அல்லது தக்காளிப்ப்ழம், அல்லது நெல்லிக்காய் சாப்பிடவும்.
- உணவிற்க்கு பிறகு கடுக்காய் பொடி சாப்பிடலாம்.பாசிப்பயறு மாவு 2 டீஸ்பூன், வெள்ளை கொண்டை கடலை மாவு 2 டீஸ்பூன், வெந்தயப்பொடி 1 டீஸ்பூன்... இவை மூன்றையும் சேர்த்து சிறிதளவு சுடுநீரில் குழைத்து உடலில் தேய்த்துக் குளித்து வந்தால், தோல் சுருக்கம் நீங்கி இளமை நீடிக்கும்.
- அலையலய்யாக கூந்தல் பெற: நாம் உண்ணும் உணவில் அதிகமாக முட்டை, கேரட், பச்சநிற காய்கறிகள், தக்காளி, பப்பாளி சேர்க்கவும்.
- வாரத்துக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கவும்.
பொடுகு தொல்லையா?
பொடுகு தொல்லையா?
பொடுகு தானே என அலட்சியமாக இருந்து விடாதீர்கள். தலைக்கு குளித்த
உலர்த்தாமல் இருந்தாலோ, அழுக்கான தலைமுடியுடன் இருந்தாலோ மற்றும் அதிக உஷ்ணத்தினாலோ பொடுகு தோன்றுகிறது. பொடுகு வராமல் தவிர்க்க ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, டவல் போன்றவற்றை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.
* நெல்லிமுள்ளி, வெந்தயம், சிறிது மிளகு இவற்றை ஊறவைத்து மைபோல அரைத்து தலையில் தடவி ஒரு மணிநேரம் ஊறிய பிறகு, நன்கு அலசினால் பொடுகு தொல்லை மறையும்.
* நீலகிரி தைலத்தை சூடாக்கி தலையில் தடவி, வெந்நீரில் ஒரு பெரிய துவாலையை நனைத்து தலையில் கட்டி விடுங்கள். பிறகு நன்கு அலசி விடவும்.
மட்டன் மிளகு கறி
தேவையான பொருட்கள்:
- மட்டன் - 1/4 கி
- மிளகு - 50கி
- சீரகம் - 25 கி
- இஞ்சிபூன்டு பேஸ்ட் - 1 ஸ்பூன்
- வரமிளகாய் - 2
- பச்சைமிளகாய்- 2
- எண்ணெய் - 6 ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
செய்முறை:
- மட்டனை குக்கரில் 6 விசில் விட்டு இறக்கவும்.மிளகு,சீரகத்தை நைஸாக அரைக்கவும்.கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வரமிளகாய்,பச்சைமிளகாய் போட்டு தாளிக்கவும்.
- பின் அரைத்த மசாலா,இஞ்சிபூண்டு பேஸ்ட்,உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.அதனுடன் வேக வைத்த மட்டனை போட்டு மசாலா மட்டனில் பிடிக்கும் வரை வதக்கவும்.
- 5 நிமிடம் மிதமான தீயில் வைத்து பிரட்டி எடுக்கவும். மட்டன் மிளகு கறி தயார்.
sangeetha.ss
காசி அல்வா
தேவையானவை
- பூசணிக்காய் துண்டு - பெரியது
- கண்டென்ஸ்டு மில்க் - 1 கப்
- பால் - 4 தேக்கரண்டி
- சர்க்கரை - 3 கப்
- நெய் - 1 கப்
- கேசரிப் பவுடர் - சிறிது
- பச்சைக் கற்பூரம் - சிறிது
- ஏலக்காய் தூள் - கால் தேக்கரண்டி
- முந்திரி - 10
செய்யும் முறை
- பூசணிக்காயைத் துருவி அதில் சிறிது நீர்விட்டு சாறைப் பிழிந்து கொள்ளவும். சக்கையை மட்டும் எடுத்து அதனை பால் விட்டு மிக்சியில் அரைக்கவும்.
- ஒரு வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும், அதில் அரைத்த பூசணிக்காய் விழுது, சர்க்கரை, கண்டென்ஸ்டு மில்க் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கிளறவும்.
- கேசரிப் பவுடரை சிறிது நீரில் கரைத்துக் கொண்டு வாணலியில் ஊற்றவும்.
- இறுதியாக ஏலப்பொடி, பச்சைக் கற்பூரப் பொடி சேர்த்து கிளறிவிடவும்.
- பரிமாறும் போது நெய்யில் வறுத்த முந்திரியைக் கொண்டு அலங்கரிக்கவும்.
- Harini.
கோடை வெயில்லில் இருந்து சரும்மத்தை பாதுகாக்க
கருவளையம் போக்க:
- வெள்ளரி, உருளைக்கிழங்கு இரண்டையும் நன்றாக அரைத்து கண்களில் வைக்கவும் இதன் மேலே பன்னீரில் நனைத்த துணியினை வைத்து தூங்க வேண்டும்.
உதட்டை பாதுகாக்க:
- புதினா சாறு, வெண்ணை, தடவவும்.
- சிலறுக்கு வெடிப்பு இருக்கும் இதை போக்க வெந்தயம் 1ஸ்பூன் இரவில் ஊறவைத்து காலையில் மோரில் கலந்து குடிக்கவும்.
கோடை வெயில்லில் இருந்து சரும்மத்தை பாதுகாக்க:
- உலர்ந்த சருமம் உள்ளவர்கள் அரைத்த கேரட்டுடன் 1ஸ்பூன் தேன் கலந்து 20நிமிடம் முகத்தி பூசி பின்பு கழுவிவிடவும்.
கழுத்தில் உள்ள கருப்பு மறைய:
- கோதுமை மாவில், எலுமிச்சைசாறு, சிறிது தேன், முட்டையில் வெள்ளைகரு கலந்து தேய்க்கவும். 20 நிமிடம் கழித்து குளிக்கவும்.
saki
யோகாசணப் பயிற்சிகள் 2
யோகாசணப் பயிற்சிகள் - 1
பத்மாசனம் செய்முறை :

- நிமிர்ந்து நேராக உட்காரவும். வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைக்கவும். பிறகு மெதுவாக முன்புறம் குனிந்து இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைக்கவும். இடுப்பு, முதுகு எலும்பு, கழுத்து ஆகியவற்றை நிமிர்த்தி வைக்கவும் கைகளை, கால், மூட்டுப் பகுதியில் பக்கத்திற்கு ஒன்றாக வைக்கவும். கை விரல்களில் ஆள்காட்டி விரலை தவிர மற்ற மூன்று விரல்களையும் நீட்டி வைக்கவும். ‘சின்’ முத்திரை என்று அழைக்கப்படும். இதனால் மன ஒரு நிலைப்படும் ஆற்றல் அதிகரிக்கும். சுவாசம் சாதாரண நிலையில் இருக்கட்டும். மனதை புருவ மத்தியில் நிறுத்தவும். கண்கள் மூடி சாந்தமாக இருக்கட்டும். இது பத்மாசனமாகும்.
- முதலில் சில நிமிடங்கள் துவங்கி குறைந்தது இருபது நிமிடங்கள் வரை அசையாமல் இருக்கவும். முழுமையான பத்மாசனம் செய்ய இயலாதவர்கள் வலது காலை மட்டும் மடித்து வைக்கவும். இது ‘அர்த்த பத்மாசனம்’ இது போலவும் சில நாட்கள் பயிற்சி செய்யவும்.
பயன்கள்
- தியானத்திற்கு உகந்தது. மன ஒரு நிலைப்படுத்தும் ஆற்றலை மேம்படுத்தும். மூட்டு வலிகள், மூட்டு தேய்மானங்கள் வராமல் தடுக்கும். தொடைப் பகுதியின் தசையை தேவைக்கு அதிகமாக இருப்பின் குறைக்கும். மூலாதார சக்திக் கனலை அதிகப்படுத்தி தெய்வீக ஆற்றலை தூண்டிவிடும்.
faizakader
கண்களைப் பாதுகாக்க. . .
40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது.
இதை வெள்ளெழுத்து என்பார்கள்.
இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து
தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும்.
கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
-------------------------------------------------------------------------
அன்புடன்-அ.இராமநாதன்
முகம் அழகு பெற
;உருளைக்கிழங்கை தோல் சிவி துருவி வெயிலில் நன்ராக காயவிட்டு பொடி செய்து கொள்ளவும் .- இதை வாரம் ஒரு முறை முகத்தில் புசினால் முகம் பளிச் என்று இருக்கும். இயற்க்கையான ப்ளிச் ஆகும்.
- நிறம்மாறாமல் நம் இயற்கையான நிறத்தை மீண்டும் பெற இது மிகவும் சக்தி வாய்ந்தது
- ;என் அன்பு தோழிகளே இதை செய்து பார்த்து உங்களுடைய அனுபவத்தை என்னுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்
kousalyashree
பல அழகு பலன்கள் நிரம்பியது துளசி!
- பற்களைத் தூய்மையாக்கி, பளிச்சிட வைப்பதில் துளசிக்கு பெரும் பங்கு உண்டு. கண்ணுக்குக் கீழே கருவளையம் தோன்றி கருமை படர்கிறதா? கவலையை விடுங்கள். துளசி இலையுடன், பத்து கிராம் வெள்ளரி விதை, சிறிது கஸ்தூரி மஞ்சள் கலந்து அரைத்து, கண்களைச் சுற்றிலும் பூசிக் கழுவுங்கள். தோல் மிருதுவாகி கருமை காணாமல் போய்விடும்.
தலை முடிக்கு நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது துளசி. துளசி, செம்பருத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து, அதனுடன் சுத்தம் செய்த புங்கங்காய் தோல் - 4 கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது, இந்த விழுதைத் தேய்த்து அலசுங்கள். கூந்தலுக்கு அருமையான கண்டிஷனர் இந்த சிகிச்சை..
- கரடு முரடான சருமத்தை மிருதுவாக்குகிறது துளசி. பால் பவுடர், துளசி பவுடர் இரண்டும் தலா அரை டீஸ்பூன் எடுத்து இதனுடன் சந்தன பவுடர், கஸ்தூரி மஞ்சள் தலா கால் டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள். இந்த பவுடருடன் பாலை சேர்த்து (வெயில் காலத்தில் தயிரை சேர்க்கவும்) நன்றாகக் குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தினமும் முகம், கை, கால்களில் தேய்த்துக் குளிக்க... தோல் மிருதுவாகும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பேஸ்ட்..
- 10 துளசி இலையுடன், சுக்குப் பவுடர் 2 சிட்டிகை, லவங்கம் - 1. இவை மூன்றையும் நன்றாக அரைத்து, முகத்தில் தடவி கழுவுங்கள். பிறகு மேக்கப் போடுங்கள். இதனால், தோல் இறுக்கமாகும்.Tamiliulagam
Kalai - Sikaar
மருதாணி சிம்பிலா எப்படி போடுவது.

- மருதாணி சிம்பிலா எப்படி போடுவது என்று எனக்கு தெரிந்த டிசைனை இங்கு தந்து உள்ளேன். மருதாணி போட்டதும் சீனியை தண்ணீரில் கரைத்து மருதாணிடிசைன் மீது தடவவும் . நன்றாக சிவக்கும் எடுததும் தண்ணீரில் கைகழுவ வேண்டாம் . சிறிது எண்னை தடவி கொண்டால் 4 நாட்கள் வரை அழியாமல் இருக்கும்.
rani
முகப்பரு
முகப்பரு
1. கறிவேப்பிலை, வெண்ணெய் அல்லது பசும்பால் (போதுமான அளவு). கறிவேப்பிலையை பால் அல்லது வெண்ணெயில் சங்கு கொண்டு அரைத்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து குளித்து வர முகப்பரு தீரும்.
2. முல்தாணி முட்டிyinai பசும்பாலில் கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவி வர முகப்பரு குணமடையும்.
3. நல்லெண்ணெய் 100 மி.லி., மிளகு 10 எண்ணம் நன்கு சூடு செய்து மிளகு கருகியவுடன் வடிகட்டி, சூடு ஆறியவுடன் முகத்தில் தேவையான அளவு எடுத்து குளிக்கும் முன் தடவி வர குணமாகும்
ayshamuthuwappa
இயற்கை ஷாம்பு
சரும நோய் நீங்க:
நெல்லிப்பொடி, கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குளிக்கவும்.
முதுமையினை தடுக்க
தினமும் ஒரு பேரிச்சை, ஒரு அத்தி பழம், காய்ந்த திராட்சை, பாதம் பருப்பு சாப்பிடவும்.
அருமையான இயற்கை ஷாம்பு
டீஸ்பூன் வெந்தயம், 2 டீஸ்பூன் துவரம் பருப்பு இவற்றை ஒன்றாகக் கலந்து மூழ்கும் அளவு தயிர் ஊற்றி ஊற வையுங்கள். மறுநாள் இதனை நைஸாக அரைத்து, இதனுடன் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறைக் கலந்து தலையில் தேயுங்கள். பத்து நிமிடம் ஊறவிட்டு, பிறகு தண்ணீரில் அலசினால் அழுக்கு அகன்று, மென்மையாகி, முகம் பார்க்குமளவுக்கு தலைமுடி பளபளக்கும். புரோடீன் சத்து நிறைந்த அருமையான இயற்கை ஷாம்பு
வெந்தயம் 1 கிலோ, முழு துவரை 1 கிலோ, புங்கங் கொட்டை 250 கிராம், பூலாங்கிழங்கு 250 கிராம் இவற்றைஷி காயவைத்து, ஒன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது ஷாம்புக்குப் பதிலாக இந்தப் பொடியை உபயோகியுங்கள். அழுக்கை நீக்குவதோடு, அட்டகாசமான கண்டிஷனராகவும் செயல்பட்டு முடியை இந்தப் பொடி பாதுகாக்கும்
உடல் சூட்டினால் முடிஉதிர்வதை தடுக்க
வெந்தயம் 1 டீஸ்பூன், செம்பருத்திப் பூ 5, செம்பருத்தி இலை 5, புங்கங்காய் 3... இவற்றை காயவைத்து அரைத்து வையுங்கள். இந்தப் பொடியை தண்ணீரில் குழைத்து தலையில் தேய்த்துக் குளித்தால், உடல் சூடு ஓடிப்போய் குளுமை குடியேறும். உடல் சூட்டினால் முடி உதிர்வதை இதன்மூலம் தடுக்கலாம்.
இளநரை போக்க>
வெந்தயம் மட்டுமல்ல, அதன் கீரையும் அழகுக்கு கைகொடுக்கும் அற்புதத் தோழிதான். அதைக் கொண்டு செய்யப்படும் இந்தத் தைலம் தலைமுடி செழித்து வளர்வதில் உரமாகவே செயல்படுகிறது. வெந்தயக் கீரையை இடித்துப் பிழிந்தெடுத்த சாறு கால் லிட்டர், நல்லெண்ணெய் கால் லிட்டர்... இவை இரண்டையும் ஒன்றாகக் கலந்து காய்ச்சுங்கள். புகைந்ததும், அதில் ஒரு டீஸ்பூன் வால் மிளகு, நான்கு பிஞ்சு கடுக்காய்களை ஒன்றிரண்டாக தட்டிப் போட்டு இறக்கி வடிகட்டுங்கள். இதனை தினசரி தலையில் தேய்க்க, இளநரை மறைந்து, கரிய கூந்தல் மின்னும் பொடுகே...
பொடுகுத் தொல்லை போக்க
நன்றாகக் காயவைக்கப்பட்ட பெரிய நெல்லிக்காய் 50 கிராம், வெந்தயம் 50 கிராம், மிளகு 10 கிராம்... இவற்றை வறுத்துப் பொடியுங்கள். அரை கிலோ நல்லெண்ணெயைக் கொதிக்க வைத்து, பொடித்து வைத்துள்ள பவுடரைப் போட்டுப் புகைந்ததும் தீயை அணைத்து எண்ணெயை மூடி வையுங்கள். இந்த எண்ணெயைத் தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை போயே போய்விடும். சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இந்த எண்ணெய் தயாரிப்பில் நெல்லிக்காயைத் தவிர்த்துவிடலாம்
பாயிஜா



Latest Entries