குறிப்புகளை அனுப்புவது எப்படி? Print E-mail

 
தமிழ்குடும்பத்தில் உங்கள் குறிப்புகள், டிப்ஸ், பயணக்கட்டுரை அல்லது உபயோகமான மற்ற விஷயங்களை அனுப்பி மற்றவர்கள்  பயன்பெற வேண்டுமா?  நீங்க செய்வதெல்லாம், இது தான்...

1. முகப்பில் உள்ள  "தமிழில் எழுத" பகுதியை (Tamil Keyboard) கிளிக் செய்து, அதில் உள்ள (English-to-Tamil)  டைப்ரைட்டர் மூலமாக தமிழில் எழுதி, அதை "copy" செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

2. உங்கள் userid/password கொடுத்து உள்ளே நுழையவும்.

3. நீங்கள் உள்ளே நுழைந்ததும், மேலே உள்ள  "உங்கள் பகுதி"  என்ற Menu-வில் "குறிப்புகளை அனுப்ப"  எனும்  தலைப்பை கிளிக் செயது "புதிய குறிப்பு" எனும் லின்க்-கை கிளிக்  செய்யவும்.

4. குறிப்புகளை அனுப்பும் பக்கத்தில்  முறையான பகுதி (Section) மற்றும் பிரிவு (Category) யை  தேர்ந்தெடுங்கள்.  உதாரணமாக, நீங்கள் அனுப்புவது டிப்ஸ் ஆக இருந்தால் "டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்" என்ற பிரிவை -தேர்வு செய்யுங்கள்

5. அடுத்து,  அதே பக்கத்தில், நீங்க அனுப்பும் குறிப்பின் தலைப்பை (Title* )பதியுங்கள். உதாரணமாக,  "சுடு தண்ணீர் செய்வது எப்படி?"  Cool Cool

6.  குறிப்புகளுடன் புகைப்படம் அனுப்புவதாக இருந்தால்  "Image"  பட்டனை கிளிக் செய்து படத்தை Upload  செய்யுங்கள்.

7. கடைசியாக,  "பதிவிரக்கம் செய்" என்ற பொத்தானை கிளிக் செய்யுங்கள்.

8. உங்கள் குறிப்பு உபயோகமான குறிப்பாக இருந்தால், அது பதிக்கப்பட்டு உங்களுக்கு உடனடியாக மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

9. நீங்கள்  முன்பு அனுப்பிய அனைத்து குறிப்புகளையும் ஒரு சேர காண விரும்பினால், "உங்கள் பகுதி"  /"குறிப்புகளை அனுப்ப" /   "உங்கள் படைப்புகள்"  என்ற Link-கிளிக் செய்யுங்கள்.

10. "போட்டோவுடன் சமையல்" அல்லது மற்ற குறிப்புகளுடன் புகைப்படங்களை அனுப்ப விரும்பினால்,  உங்கள் அனைத்து போட்டோக்களுடன்,   படிப்படியான் செய்முறைகளுடன் (step-by-step instructions)   விளக்கினால படிப்பவர்களுக்கு எளிதாக இருக்கும்.   [புகைப்படத்துடன் குறிப்புகளை அனுப்புவது எப்படி எனும் விளக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது]

பின் குறிப்பு:

*  புகைப்படங்களுடன் வரும் குறிப்புகள் அதிக பார்வையாளர்களை கவரும்..

* புகைபடங்களுடன் வரும் குறிப்புகள் (Photos with step-by-step instructions) மட்டுமே முதல் பக்கத்தில் (Front Page) வெளியிடப்படும்.

* அதிக புகைப்படங்கள் அனுப்பினால், அதில் சிறந்த படங்களை தேர்ந்தெடுத்து பிரசுரிக்க ஏதுவாக இருக்கும்.

 இது சம்மந்தமாக வேறு சந்தேகங்கள் இருந்தால் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள்.

 

உங்கள் குறிப்புகளுடன் புகைப்படங்கள் இருந்தால்.  "குறிப்புகளை அனுப்ப" வழியாகவே அனைத்து புகைப்படங்களையும் நீங்களே பதிக்கலாம் (upload photos by yourself).

உதாரணமாக.. ஒரு சமையல் குறிப்புடன் 4 புகைப்படங்கள் அனுப்புவதாக இருந்தால். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இதோ..

 
1. "உங்கள் பகுதி"  "குறிப்புகளை அனுப்ப"  "புதிய குறிப்பு" கிளிக் செய்யுங்கள்

2. உள்ளே உள்ள கட்டத்தில் உங்கள் குறிப்பை வழக்கம்போல் பதியுங்கள் (Paste your article or Give step-by-step instructions of your recipe or hand works).

3. அடுத்து அந்த கட்டத்தின் கீழே உள்ள "Start upload"  எனும் பொத்தானை அழுத்தி "Browse" எனும் பொத்தானை அழுத்தி உங்கள்  கணணியில் உள்ள புகைப்படத்தை தேர்வு செய்து...

4. அடுத்து "Start upload" பொத்தானை அழுத்தினால், உங்கள் கணணியில் உள்ள புகைப்படம் இணையதளத்தை வந்தடையும்.  (The uploaded picture will reach  www.Tamilkudumbam.com image folder)

5. நீங்கள் பதிவு செய்த புகைப்படத்தை (uploaded photo) தேர்ந்தெடுத்து பெட்டியில் மேலே உள்ள்  "Insert" எனும் லிங்க்-கை கிளிக் செய்தால் உங்கள் புகைப்படம் உங்கள் குறிப்பிலேயே சேர்ந்து விடும் ( will append the photo with your article)

ஒவ்வொரு புகைப்படத்திற்க்கும் நீங்கள் இதை நீங்கள் பின் பற்ற வேண்டும் (follow steps 3, 4 and 5 for each photo you want to upload). இது முதல் முறை செய்வதற்க்கு ஒரு சில நிமிடங்கள் எடுக்கலாம். பழகிவிட்டால் மிக மிக எளிது.அல்லது போட்டோக்களை  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

 

பொதுவான கேள்விகள்:

 

கேள்வி: என் புகைப்படம் பெரிய அளவில் உள்ளதே? பெரிய புகைப்படத்தினால் குறிப்பின் அழகு கெட்டு விடாதா? (What if my image size is very big?)
பதில்: கவலையை விடுங்கள். உங்கள் புகைப்படம் பதியப்படும்போது, தானாகவே குறிப்பிட்ட அளவிற்க்கு சுருங்கி விடும்.

கேள்வி: என் புகைப்படத்திற்க்கு நம்பர் இட வேண்டுமா?  (உதாரணமாக: artwork1.jpg, artwork2.jpg....)
பதில்:  நீங்கள் அனுப்பும் புகைப்படங்கள் நம்பர் இட்டு வரிசைப்படுத்தி இருந்தால், அதை பதிவதற்க்கு ஏதுவாக இருக்கும். எண் வரிசைப்படுத்தாத புகைப்படங்கள் மாறிவிட்டால் உங்கள் குறிப்பின் விளக்கம் மற்றும் அழகு பாதிக்க வாய்ப்பு உள்ளது.

கேள்வி: ஒவ்வொரு புகைப்படத்தையும் மேலேற்ற (upload photos) எனக்கு நிறைய நேரம் எடுக்கிறதே?
பதில்: உங்களின் Internet speed பொறுத்து நேரம் எடுக்கலாம்.  Internet speed குறைவாக உள்ளவர்கள் நீங்களே புகைப்படத்தின் அளவை (resize photo size) ஒரு இலவச மென் பொருள் மூலமாக மாற்றியமைக்கலாமே?

அந்த இலவச மென்பொருள் இங்கு கிடைக்கும் http://www.photomeister.com/ 

கேள்வி: ஒவ்வொரு புகைப்படத்தையும் சரியான இடத்தில் பதிக்க வேண்டுமா? அல்லது அனைத்து புகைப்படங்களையும் குறிப்பின் கடைசியில் பதிக்கலாமா?
பதில்: உங்கள் விருப்பம்போல் குறிப்பின் இடையிலும் பதிக்கலாம். அல்லது அனைத்து புகைப்படங்களயும் குறிப்பின் கடைசி பகுதியிலும் இணைக்கலாம். பதியும் முன் அது சரிபார்த்து பதியப்படும்.

 


இது தவிர வேறு கேள்விகள் இருந்தால் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it எனும் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.