கேள்வி-பதில்கள் Print E-mail

 
1. தமிழ்குடும்பம்.காம்  உறுப்பினராவது எப்படி? இதற்க்கு கட்டணம்  ஏதும் உண்டா?
தமிழ் குடும்ப உறுப்பினராவது மிக எளிது. புதிய உறுப்பினர் பதிவு செய்ய  என்ற லிங்க்- மூலமாக 10 நொடியில் உறுபினராகி, இதில் இருக்கும் அனைத்து குறிப்புகளையும் பார்வையிடலாம் அல்லது,  உங்க அனுபவ குறிப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.  இது ஒரு இலவச இணையதளம். இதில் சேர்வதற்க்கு எந்த கட்டணமும் கிடையாது.
 

 
2. கருத்துக்கள்  பகுதி பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டுமா?  அது ஏன்?"
இது ஒரு குடும்ப நல இணையதளம்.  இதில் பதிவு செய்யாத உறுப்பினர்கள் நுழைந்தால், அவர்கள் எழுத்தின் தரத்தையும், ஒழுக்கத்தையும் கண்கானிப்பது மிகவும் கடினம்.  மறைமுகமாக அல்லது அநாகரீக வார்த்தைகளை கொண்டு மற்ற உறுப்பினர்களின் மனதை புன்படுத்துவதை தவிர்க்கவே கருத்துக்கள் மற்றும் வாங்க பழகலாம் பகுதியை பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மட்டும் வைத்திருக்கின்றோம்.
 

 

 
3. தமிழில் எழுதுவது எப்படி?

Automatic Tamil writing in Feedback and Discussion forum: 

இந்த தளத்தில் தமிழில் எழுதுவதற்க்கு இலகுவாக , "உங்கள் கருத்து" (Feedback for the articles),  "வாங்க பழகலாம்" (Discussion Forum) இந்த இரண்டு பகுதிகளிலும்  நீங்கள் தட்டும் அனைத்தும் தமிழிலேயே வருமாரு அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக இந்த பெட்டியில் amma என்று ஆங்கிலத்தில் தட்டினால் தமிழில் "அம்மா" என்று தானாகவே மாறிவிடும். இதை Taminglish என்று சொல்வார்கள்.

Taminglish-ல் முதல் முறை டைப் செய்யும்போது சிரமமாக இருப்பது போன்று தோன்றும், பழகினால் மிக மிக எளிது என்பதை உணர்வீர்கள்.

Built-in Tamil keyboard in Article submission / Article editing area

பதிவு செய்த உறுப்பினர்கள் குறிப்புகளை அனுப்ப ஏதுவாக,  "குறிப்புகளை அனுப்ப"  என்ற பகுதியிலும் Tamil Keyboard ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதில் தமிழில் டைப் அடித்து, copy செய்து Intro-Text அல்லது Main-Text பகுதியில் paste செய்து உங்களின் குறிப்புகளை அனுப்பி வைக்கலாம்.
 

 
4. எனக்கு Internet connection speed மிக குறைவு. எனவே, குறிப்புகளை ஒரு ஃபைலில் சேமித்து வைத்து அவ்வப்போது அனுப்ப முடியுமா?

தாராளமாக!  நீங்கள் செய்வதெல்லாம்  ஒரு Notepad-ல் தமிழில் டைப் செய்து   File / Save As (Encoding type: utf-8 or unicode) என்று Save செய்து Internet கனெக்சன் ஆகியதும் அனுப்பி வைக்கலாம்.

அதற்க்காக நீங்கள் செய்ய வேண்டியது,  eKalappai 2.0b(Anjal)  என்ற மின்பொருளை இங்கு  பதிவிரக்கம் செய்து, உங்கள் கணணியில் நிறுவவும். Tavultesoft Keyman எனும் தமிழச்சு உதவியுடன் நீங்க தமிழில் சரளமாக எழுதலாம். Alt-1 மற்றும் Alt-2 எனும் (Toggle keys) பட்டனை தட்டுவதன் மூலமாக  தமிழிலும், ஆங்கிலத்திலும் கலந்து எழுதலாம்.

 

 
5. மற்ற தளத்தில் கண்ட செய்தி குறிப்புகளை அப்படியே copy/paste செய்து உங்கள் இணையத்தில் பதிக்கலாமா?

பதில்: மற்ற தளத்து விசயங்களை பிரசுரிக்க "தமிழ்குடும்பம்.காம்" அமைக்கப்படவில்லை. எனவே மற்ற தளத்து விசயங்களை அப்படியே copy/paste செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

உலகத்தில் உள்ள எந்த விசயமும் ஒரு தனி மனிதருக்கு சொந்தமான அல்லது, ஒரு தனி மனிதனின் வாயில் உதித்த விசயமாக இருக்க முடியாது. இன்றைய செய்தி தாள், வார பத்திரிகை, மாத பத்திரிகை அனைத்தும் பல செய்திகளின் தொகுப்பை சார்ந்ததே. ஆனால் அவை ஒவ்வொன்றிற்க்கும் ஒரு தனித்துவம் (Presentation Style) உண்டு. அந்த விதத்தில், தமிழ்குடும்பம்.காம் மற்றும் அதன் பதிப்புகளும் தனித்தவையே.
இதில் ஓவ்வொரு குறிப்பும் உலக அதிசய குறிப்பு அல்ல, ஆனால், ஒவ்வொரு உறுப்பினரும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நல்ல விசயமாக இருந்தால், அது பிரசுரிக்கப்படும்.

இரத்தின சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், copy/paste செய்வதை முழுவதும் தவிர்த்தால் இந்த தளத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தலாம். உறுப்பினர்களின் மேலான ஆதரவு இதற்க்கு தேவை.