| மதம் வேண்டாம், மனம் போதுமே! |
|
|
|
மதம் வேண்டாம், மனம் போதுமே? உங்கள் குறிப்புகளிலும், பின்னூட்டங்களிலும், உரையாடல்களிலும் தயவு செய்து "மதம்/ஜாதி" சம்மந்தமான விசயங்களை பதிய வேண்டாம் என்று அன்புடன் வேண்டுகிறோம்.
சகோதர சகோதரிகள் நிறைய நல்ல விஷயங்களை தெரிவிக்கின்றீர்கள். ஆனால், தமிழ்குடும்பம்.காம் ஒரு ஜாதி, மத பேதமின்றி, தமிழ் பேசும் அனைவருக்காகவும் உருவாக்கப்பட்ட இணையதளம். ஒருவருக்கு நல்லதாய் தென்படும் விஷயம், மற்றவருக்கு முகம் சுருங்க வைக்க கூடாதல்லவா? எனவே ஜாதி, மத, மார்க்க சம்மந்தமான விசயங்களை நீங்கள் பதிவு செய்து, நாங்கள் அதை நீக்கி விட்டால், அதை தனிப்பட்ட விரோதமாக எண்ணவேண்டாமென்று அன்புடன் கேட்டுகொள்கிறோம். உங்களின் அருமையான, அறிவு கூர்ந்த குறிப்புகளுக்கு மீண்டும் மனமார்ந்த நன்றியை தமிழ்குடும்பம் நேயர்கள் சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம். Copy வேண்டாம்; Coffee போதுமே? சில உறுப்பினர்கள் ஆர்வ மிகுதியால்(?) மற்ற இணையதளத்தில உள்ள விசயங்களை அப்படியே copy/paste செய்து இங்கே அவர்களுடைய சொந்த குறிப்பு போல் போட்டு நல்ல பெயரும் வாங்கி விடுகிறார்கள் ...ஆஹா!! இதை அந்த குறிப்பிற்க்கு சொந்தக்காரர் பார்த்து விட்டால மனம் வருந்துவது மட்டுமின்றி, நம்மையும் சிரமத்திற்க்கு உள்ளாக்க கூடுமல்லவா? அதனால், வேறு இணையதளத்து விஷயங்கள அப்படியே copy/paste செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறோம். உங்களுக்கு மிகவும் பிடித்த குறிப்பென்றால், குறைந்த பட்சம் அந்த இணைய தளத்தின் பெயரை குறிப்பிட்டு "நன்றி" என்று குறிப்பிடுவது நமது கடமை. இல்லையெனில், அது திருட்டு குறிப்பு என்றாகிவிடும். தமிழ்குடும்பம், ஒரு தனித்துவம் மிக்க குடும்பமாக இருக்கு உங்களுடை உதவி தேவை. என்றும் நட்புடன், தமிழ்குடும்பம்.காம் குழு
|


