இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 20 Comments

குலாப் ஜாமூன் {புதுமுறை}

தேவையான பொருட்கள்

மைதா மாவு - 1 கப்
மில்க் பவுடர்  - 3 கப்
வெண்ணை[அறை வெப்பநிலையில்] -  1 ஸ்டிக் / 115  கிராம்ஸ்
பேக்கிங் பவுடர் - 1/4 ஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 ஸ்பூன்
வெள்ளை ரவை - 2 ஸ்பூன்
ஹாஃப் & ஹாஃப் மில்க்  (அ) கெட்டியான  பால் (அ) ஃப்ரெஷ் கிரீம்  - 1 கப்
சர்க்கரை - 6  கப்
ஏலக்காய் - 4
நெய் - 2 ஸ்பூன்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
ரவையை அரை மணி நேரம் பாலில் ஊற வைக்கவும்.
மைதாவுடன் பேக்கிங் பவுடர், பேக்கிங் சோடா சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
பால்பவுடருடன் வெண்ணை மற்றும் ஊறிய ரவை சேர்க்கவும்.

அனைத்தும் ஒன்று சேருமாறு கலக்கவும்.

இத்துடன் மைதாவை சேர்த்து கலக்கவும்.

ஹாஃப் &  ஹாஃப் மில்க்-ஐ சிறிது சிறிதாக ஊற்றி மாவைப் பிசையவும்.

மென்மையாக விரல்களால் பிசையவும். அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது.பிசைந்த மாவை அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

பின்னர் சம அளவு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.
எண்ணெயுடன் நெய்யைக் கலந்து காய வைக்கவும். மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்தவுடன் ஜாமூன்களைப் பொரித்தெடுக்கவும்.

தீ மிதமாக இருக்கவேண்டும். இல்லையெனில் ஜாமூன் நிறம் மாறிவிடும்.
சர்க்கரையுடன்  6 கப்  நீர் சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்து கொதி வந்தவுடன் ஏலக்காய் தட்டிப் போட்டு  பத்துநிமிடம் கழித்து பாகை அடுப்பில் இருந்து இறக்கிவிடவும்.

பாகு சற்று சூடாக இருக்கும் பொழுதே ஜாமூன்களை பாகில் போட்டு இரண்டு மணி நேரம் ஊற விடவும்.

யம்மி குலாப் ஜாமூன் ரெடி! விரும்பினால் பரிமாறும் சமயம் குலாப் ஜாமூன்களை சற்றே சூடு படுத்தி, சின்ன கிண்ணத்தில் வைத்து அதன் மேல்  உங்க பேவரைட் ஐஸ் கிரீமை வைத்து பரிமாறுங்க!! ஹாட் குலாப் ஜாமூன் வித் ஐஸ் கிரீம் ஒரு சூப்பர் காம்பினேஷன்!
குறிப்பு:
•  பொரித்தெடுத்த  ஜாமூன்களை 2 நிமிடங்கள் கழித்து சூடான பாகில் போட வேண்டும். எனவே ஜாமூன் பொரிக்கும் போதே இன்னொரு பர்னரில் பாகு ரெடி செய்துகொள்ள வேண்டும்.
• பாகு, ஜாமூன் இரண்டும் அளவான சூட்டில் இருக்கவேண்டும்..இரண்டில் ஏதாவது ஒன்று சூடு அதிகமாகிவிட்டாலும் ஜாமூன்கள் உடைந்துவிடும்...ஜாக்கிரதை!! :)
இந்தக் குறிப்புகள் எல்லாம் என்னை மாதிரி சமையல் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும்.. எக்ஸ்பர்ட்டுகள் குறிப்பெல்லாம் படிக்காதீங்கோ.... :D
--மகிஅருண்
tag:soji gulab jamun
Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0
Load Previous Comments
• ஹாய் மகி ரொம்ப நல்லா இருக்கு உங்க ஜாமுன் .... yummy........ yummy

Like 0 Short URL:
• என்னை மாதிரி சமையல் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு
என்ன? நீங்கள் சமையல் கற்றுக் கொண்டு இருக்கிங்கலா?
ஆனா நீங்க எல்லோருக்கும் கற்றுக்கொடுப்பவர்களாக இருக்கிங்க
வாழ்த்துக்கள் ம்கி
:D

Like 0 Short URL:
• சந்தோஷி, மிசஸ்.முபாரக்,ஜலீலாக்கா, ப்ரியா, சாரு & ஹவ்வா, உங்கள் அனைவருக்கும் நன்றிகள்! :-)
நிஜமாகவே நான் கத்துக்குட்டிதான்..இன்னும் என் அம்மா அவ்வப்போது கேட்டுக் கொண்டே தான் இருப்பாங்க, "சமைச்சு பழகிட்டியா"-ன்னு! என் முழு கவனமும் சமையல் பக்கம் திரும்பியது கல்யாணத்துக்கப்புறம் தான்..அதுவும் இங்கே(யு.எஸ்.) வந்தப்புறம் தான்... நம்புங்க!! :D;-):-)

ஏதோ எனக்குத் தெரிந்த ரெசிப்பிகளை எல்லாருடனும் பகிர்ந்துக்கறேன்...இது தொடர உங்கள் பாராட்டுக்கள்தான் உந்துதலாக இருக்கிறது...நன்றி!

Like 0 Short URL:
• ஹாய் மகி
எனக்கு நம்பவே முடியவில்லை இப்போது உங்க அம்மாவை தமிழ்குடும்பத்தில் நீங்க கொடுத்த ரெசிப்பிக்க்களை பார்க்க சொல்லுங்க அதன் பிறகு
சமைச்சு பழகிட்டியா? என் கேட்கவேமாட்டாங்க!! சரியா:D

Like 0 Short URL:
• என்ன மகி எப்படி இருக்கிங்க? உங்க சமையல் எல்லாமே சூப்பர். அதிலேயுன் ஜாமுன் என்றால் எல்லாருக்குமே பிடித்தது. இது புது மாதிரி இருக்கு. அவசியம் செய்கிறேன்.நல்ல தெளிவா படங்களோட குறிப்புகளும் ப்ரமாதம்.

Like 0 Short URL:
• ம்ம்ம் யம்மி யம்மி மகி

Like 0 Short URL:
• கண்டிப்பா சொல்லறேன் ஹவ்வா...நன்றி! :D
விஜி,நிஷா..உங்கள் ஊக்க மொழிகளுக்கு நன்றி!

Like 0 Short URL:
• சூப்பர் மஹி இந்த ரெஸிபியை நான் செய்து பார்த்தேன் மிக ருசியாக இருந்தது

Like 0 Short URL:
• குலாப் ஜாமூன் செய்து சுவைத்தீர்களா கதீஜா..உங்கள் பின்னூட்டம் கண்டு மகிழ்ச்சியாக இருக்கு..நன்றிகள்! :D

Like 0 Short URL:
• Guest - cathy

What is half and half milk ? can we use
condensed milk ?

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

новости лнр, новости июля, последние новости видео Новости Ярославля новости лнр, новости лента ру,...
новости луганска, последние новости, новости харькова Новости Якутска новости, последние новости ви...
году последние новости, новости россии сегодня, новости года Новости Южно-Сахалинска новости 2015, ...
новости 1 канал, новости сейчас, сайт новостей Новости Энгельса новости харькова, русская весна нов...
новости, новости россии и мира, новости 2 Новости Элисты новости 1, фото новости 2015, новости перв...