REPUBLIC DAY ரைஸ்
இது உங்கள் குடும்பம்!
Wednesday, Jun 19th
Last update12:42:27 AM
உபயோகமான தகவல்களுக்கு பின்னூட்டம் (Comments/ Facebook Like) இட்டால், இதை பதித்தவர்களுக்கு ஊக்கமளிக்கும்!
பாசுமதி அரிசி – 2 ஆழாக்கு
கேரட்,பீன்ஸ்,பட்டாணி, - கால் கப் (பொடியாக அரிந்த்து)
வெங்காயம் - ஒன்று
சிறியதுபட்டர் (அ) நெய் - முன்று மேசை கரண்டி
பிரிஞ்சி இலை – இரண்டு
பட்டை – ஒரு அரை அங்குலம் ஒன்று
கிராம்பு – 2ஏலம் – 2
மிளகு – 5முந்திரி – 5
ஷாஜீரா – கால் தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் – இரு ஸ்பூன்
தக்காளி சிறியது பாதி
கொத்துமல்லி தழை –சிறிது
சிவப்பு பச்சமிளகாய் - ஒன்று
அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும்.ரைஸ் குக்கரில் நெய்யை விட்டு பிரிஞ்சி இலை, பட்டை,கிராம்பு,ஏலம்,மிளகு ,ஷாஜீரா ,முந்திரி பொடியாக அரிந்து போட்டு பொரிய விடவும்
.வெங்காயம், இஞ்சி பூண்டு, கொத்துமல்லி சேர்த்து பொன்னிறமாகமல் வெள்ளையாக வதக்கவும்.
கேரட்,பீன்ஸ் பொடியாக அரிந்து பட்டாணி சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்
பிற்கு ஊறிய அரிசி சேர்த்து உடையாமல் கிளறவும்.அரிசி ஒன்றுக்கு ஒன்னறை டம்ளர் வீதம் தண்ணீர் அளந்து ஊற்றி அரை தக்காளி பழத்தை இரண்டாக அரிந்து போட்டு ரைஸ் குக்கர் ஆன் செய்து செய்து முடிக்கவும்.
சுவையான கம கமன்னு கலர் ஃபுல்லான வெள்ளை வெளேருன்னு வெஜ் கீ ரைஸ் ரெடி..
மட்டன் குருமா, சிக்கன் கிரேவி,மீன் குழம்பு , கட்டி பருப்பு தக்காளி இறால் ஆகிய சைட் டிஷ்கள் பொருந்தும், வெரும் கொத்துமல்லி துவையல் வைத்தாலும் அப்படியே சும்மாவே பிடித்து சாப்பிடலாம்.
jaleela