இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 24 Comments

ஹைதராபாத் இறால் பிரியாணி

Active Image

தேவையானப் பொருட்கள்

Image

இறால் - 1/2
அரிசி - அரை கிலோ
எண்ணை - 1 டம்ளர்
பட்டர் - 1 ஸ்பூன்
பிரியாணி மசாலா - 2 ஸ்பூன்
இஞ்சிபூண்டு விழுது - 2 ஸ்பூன்
ப்ரைடு ஆனியன் - 1
தயிர் - 150 கிராம்
பச்ச மிளகாய் - மூன்று
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞசள் - கால் தேக்கரண்டி
உப்பு - தேவையானஅளவு
லெமென் - ஒன்று
கொத்துமல்லி தழை - ஒருகொத்து
புதினா - ஒரு கொத்து
பட்டை,ஏலம்,கிராம்பு - 3
குங்குமப்பூ (அ) ரெட் கலர்  - சிறிதளவு
முதலில் பிரியாணி மசாலா திரிக்க தேவையானவை
பட்டை, ஏலக்காய், கிராம்பு, - ஒவ்வொன்றும் 3
பிரிஞ்சியிலை - 1
கருப்பு ஏலக்காய் -2
ஜாதிபத்திரி - சிறிதளவு
ஷாஜீரா -  1 1/2  ஸ்பூன்
கசூரிமேத்தி இலை - 1 ஸ்பூன்
மிளகாய்தூள் - 1/2 ஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு - 10
சோம்பு - சிறிதளவு (மீன்பிரியாணி ம்ற்றும் இறால் பிரியாணிக்கு மட்டும் சோம்பு போடவும் மட்டன் சிக்கன் பிரியாணிக்கு சோம்பை தவிர்த்து விடவும்)
சீரகம் - 1/2 ஸ்பூன்
ப்ரைடு ஆனியன் - 1 1/2 ஸ்பூன்
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு நைஸா அரைத்து கொள்ளவும். இநத பொடியை எல்லா பிரியாணிக்கும் யூஸ்பண்ணலாம். அரைத்து ஸ்டோர்பண்ண வேண்டாம். செய்யும் போது ப்ரெஷ்ஷாக திரித்து கொண்டால்தான் சுவைஅபாரமாக இருக்கும். நான் 1/2 கிலோவிற்குதான் அளவு கொடுத்திருக்கிறேன்.கடல் உணவுகளுக்கு ரொம்ப மசாலா யூஸ் பண்ணக்கூடாது.
ப்ரைடு ஆனியன் பெரிய ஸ்டோர்களில் கிடைக்கிறது. இல்லையெனில் பல்லாரி வெங்காயத்தை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும் அதை டிஷ்யூவில் லைட்டாக ஒற்றி எடுத்து விட்டு, 1/2 ஸ்பூன் அரிசிமாவை அதில் தூவி, கைகளால் நன்கு விரவி, எண்ணெயில் போட்டு பொறித்து  ப்ரவுன் கலர் வரும் போது எடுத்து வைக்கவும்

செய்முறை

Image

இறாலுடன், மிளகாய்தூள்,மல்லிதூள்,சீரகத்தூள்,மஞ்சள்தூள், இஞ்சிபூண்டு விழுது,உப்பு, கொஞ்சம் மிளகுத்தூள் போட்டு 1 மணிநேரம் ஊற வைக்கவும்.

Image

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு இறாலை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும். பாதி அளவு வெந்த்தால் போதும்

Image

அதே கடாயில் சிறிதளவு இஞ்சிபூண்டு விழுதைப் போட்டு வதக்கி, தயிர், மல்லி, புதினா, பச்சைமிளகாய்,  போட்டு வதக்கவும், உப்பு, 1 ஸ்பூன் பிரியாணி மசாலா,  பிரைடு ஆனியன்  போட்டு   கொஞ்சம் வதக்கவும்.

Image

இதில் பொரித்து வைத்த இறாலை போட்டு, 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விட்டு இறக்கி வையுங்கள். சாதத்தை முக்கால் வேக்காடு வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்

Image

Image

அரிசியில் ஏலம்,கிரரம்பு, பட்டை, உப்பு போட்டு முக்கால் பதம் வேகவைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குங்குமப்பூவை தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.
Image
ஒரு வாயகன்ற பாத்திரத்தின்  அடியில் இறால் கலவையை ஊற்றி, அதன் மேல் வடித்து வைத்துள்ள சாதததை நன்கு பரப்பி விட்டு, மேலே குங்குமப்பூ கலைவைய் ஊற்றி, ப்ரைடு ஆனியன், மல்லி, புதினா தூவி மூடி போட்டு முடி அடுப்பில் தோசைகல் போட்டு, அதன் மேல் பாத்திரத்தை வைத்து 10 நிமிடம் ஸ்லோவ் ப்ளேமில் வைக்கவும்.

Image

Image

சுவையான இறால் பிரியாணி தயார்.

பாயிஸா & பர்சனா நீங்க கேட்டபடியே இறால் & பிஷ்பிரியாணி அனுப்பியிருக்கேன்.

முக்கிய குறிப்பு:  பின்னூட்டத்தில் கேள்விகளுக்கு ஆஃப்ரின்பானு அனுப்பிய படங்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

Image
ஷாஜீரா (Shajeera)

Image

கசூரிமேத்தி (Fenugreek leaves)

Image

ஜாதிபத்ரி  (javithri or mace)
கருப்பு ஏலக்காய் (Black cardomam)
பிரிஞ்சியிலை (Bey leaf)

(ஆஃப்ரின் பானு)

Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

Load Previous Comments
• Guest - saki

ஹாய் ஆப்ரின்,இறால் பிரியாணி வித்தியாசமாக இருக்கு,செய்து பார்த்து சொல்ரேன்ப்பா
சூப்பரா இருக்கு. :-) :-)

Like 0 Short URL:
• Guest - rani

ஹாய் ஆப்ரீன்
தொடர்ந்து பல குறிப்புகள் கொடுக்க வாழ்த்துக்கள்

Like 0 Short URL:
• Guest - farzana

ஹாய் ஆப்ரின்
நான் கொஞ்சம் பிஸியாக இருந்ததால உடனே பதில் கொடுக்க முடியவில்லை
சாரிப்பா கோசிக்காத
எனக்காக இறால் பிரியாணி செய்து காட்டியதுக்கு ரொம்ப நன்றி
பார்க்கவே சூப்பரா இருக்கு ருசியும் நல்லா இருக்கும் என்று நினைக்கிரேன்
gobi manchuriyan was also super :-) :-) :-)

Like 0 Short URL:
• Guest - afrinebanu

ஹாய் சகி, ராணி, பர்சானா உங்க பாராட்டுக்கு நன்றிப்பா.

Like 0 Short URL:
• Guest - menagasathia

ஹாய் ஆப்ரின் ரியலி சூப்பர்ப்பா உங்க இறால் பிரியாணி.இன்றுசெய்து பார்த்தேன்.என்னிடல் ஷாகிரா,ஜாதிபத்திரி இல்லை,அது இல்லாமல் செய்துப்பார்த்தேன் டேஸ்ல் நல்லா இருந்துச்சு.மேலும் உங்க குறிப்பில் லெமன் எப்போ சேர்க்கனும் என்ற் சொல்லவில்லை,நான் தம் போடும்போது சேர்த்தேன். :-) :-)

Like 0 Short URL:
• Guest - afrinebanu

செய்து பார்த்து பதிலளித்தமைக்கு ரொம்ப நன்றி மேனகா. லெமன் குங்குமப்பூ ஊற்றியப்பின் பிழிந்து விட்டு கொஞ்சம் பட்டர் போடுவேன்

Like 0 Short URL:
• Guest - Jaleela

டியர் ஆப்ரின் நேற்று இந்த இறால் பிரியாணி செய்தேன் நல்ல வந்தது.
மற்ற தோழிகளுக்கு ஷாஜீரா - caraway

ஜலீலா

Like 0 Short URL:
• Guest - afrinebanu

ஹாய் ஜலிலாக்கா செய்து பார்த்து பின்னூட்டம் அனுப்பியதற்கு நன்றி.

மேலும் ஷாஜீராவை caraway என்று சொல்லியுள்ளீர்களே. நான் லூலூ (Grocery section) வில்தான் வாங்கினேன். Sha Jeera என்றுதான் போட்டிருந்தது. ஒருவேளை Sha Jeeraa வின் இன்னோரு பெயர் caraway ஆக இருக்குமோ.

Like 0 Short URL:
• Guest - Rimsina

ஹாய் அப்ரின் உங்க இறால்ல் பிரியாணி பார்த்ததுமெ சாப்ப்டனும் போல் இருக்கு. நான் இந்த தளத்திற்கு புதுசு.

Like 0 Short URL:
• Guest - afrinebanu

Thankyou rimsina. welcome to tamilkudumbam

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...