இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 2 Comments

கேப்சிகம், எக் கொத்து பரோட்டா

நெடுந்தூர பயணம் எந்த ஊருக்கு போனாலும், இடையில் பஸ் நிற்கும் இடைத்தில் இந்த முட்டை கொத்து பரோட்டா இல்லாத ஹோட்டலே கிடையாது. இது மீந்து போன பரோட்டாவில் செய்வது தான் ஆனால் ருசி அபராமாக இருக்கும் , ஊருக்கு ஊர் செய்முறைகள் மாறும், சில பேர் இதில் சிறிது கறி குழம்பு சேர்ப்பார்கள், சில பேர் மீன் குழம்பு சேர்ப்பார்கள்,
இதில் நான் முட்டையும் கொடமிளகாயும் சில காய் கறிகளும் சேர்த்த்து இருக்கிறேன்.

தேவையானவை
மீதியான பரோட்டா பெரியது  - இரண்டு
முட்டை - 3
கேப்சிகம் பச்சை கலர் - 1
மற்றும் யெல்லோ -  சிறிது
கேபேஜ் , கேரட் - அரை கப்
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி

உப்பு - தேவைக்கு
மிளகு தூள் - 1/2 + 1/2
வெங்காயம் - ஒன்று
தக்காளி - ஒன்று
இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒன்னறைதேக்கரண்டி
பட்டை - ஒரு சிறிய துண்டு
எண்ணை + பட்டர் - இரண்டு மேசைகரண்டி
லெமன் - 1
கொத்துமல்லி தழை - சிறிது

செய்முறை
1. கேப்சிகம், காய்கறிகள், வெங்காயம், தக்காளி எல்லாவற்றையும் அறிந்து தயாராக வைக்கவும்.
2. முட்டையை அரை தேக்கரண்டி மிளகு தூள், சிறிது உப்பு சேர்த்து கலக்கிவைக்கவும். பரோட்டாவை கத்திரி கோலால் பொடியாக அரிந்து வைக்கவும் (அப்ப தான் பார்க்க சமமாக நல்ல இருக்கும்)

3.வாயகன்ற வானலியில் எண்ணை + பட்டர் சேர்த்து ,பட்டையை வெடிய விட்டு வெங்காயம், சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சவாடை போனதும் காய் கறிகள் ,மிளகாய் தூள், உப்பு தூள் சேர்த்து நன்கு வதக்கவும், கடைசியாக கேப்சிகம்மை சேர்த்து வதக்கவும்.

3. அடித்து வைத்துள்ள முட்டையை காயில் மேல் பரவலாக ஊற்றி முடி போடு இரண்டு நிமிடம் வேகவைக்கவும். இரண்டு நிமிடம் கழித்து காயுடன் கீழிருந்து மேலாக பிறட்டி விடவும்.
மேலும் இரண்டு நிமிடம் வேக விடவும்.

4. அரிந்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்து நன்கு கிளறி  மீதி உள்ள மிளகு தூள், அரிந்து வைத்துள்ள கொத்துமல்லி தழை சேர்த்து , லெமன் பிழிந்து இரக்கவும்.

5. சுவையான சத்தான கேப்சிகம் முட்டை கொத்து பரோட்டா ரெடி.
கேப்சிகம் மனத்துடன் அருமையாக இருக்கும்.ஆபிஸ் கொண்டு செல்லவும், டூர் செல்லும் போது எடுத்து செல்லவும் வசதியாக இருக்கும் .

jaleela

Last modified on
Rate this blog entry:
0

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation

• ஹாய் ஜலீலா,
வணக்கம். ரொம்ப நல்ல டிப்ஸ். இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது. மிக்க நன்றி.

என்றும் அன்புடன்,

சுரேஷ்

Like 0 Short URL:
• உஙக்ள் கருத்து மிக்க நன்றி சுரேஷ்.

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

новости лнр, новости июля, последние новости видео Новости Ярославля новости лнр, новости лента ру,...
новости луганска, последние новости, новости харькова Новости Якутска новости, последние новости ви...
году последние новости, новости россии сегодня, новости года Новости Южно-Сахалинска новости 2015, ...
новости 1 канал, новости сейчас, сайт новостей Новости Энгельса новости харькова, русская весна нов...
новости, новости россии и мира, новости 2 Новости Элисты новости 1, фото новости 2015, новости перв...