இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

  • Home
    Home This is where you can find all the blog posts throughout the site.
  • Login
    Login Login form

ஆலு சப்பாத்தி

  • Font size: Larger Smaller
  • Hits: 2331
  • 5 Comments
  • Print

 

 

தேவையானப் பொருட்கள்
உருளைக்கிழங்கு - 4
கோதுமை மாவு - 4 கப்
உப்பு - தேவையான அளவு


மஞ்சள்தூள் - தேவையான அளவு
பச்சைமிளகாய் - 1
சீரகம் - ஒரு தேக்கரண்டி
மசாலாத்தூள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - அரைத் தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
சோம்புத்தூள் - சிறிது
கொத்தமல்லி தூள் - அரைத் தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - ஒன்றரை தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி + பரோட்டா சுடுவதற்கு
 
கோதுமை மாவில் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
 உருளைக்கிழங்கு  சிறிது மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைத்து நன்கு மசித்துக்கொள்ளவும்
பின்னர் மசித்த உருளைகிழங்கில் அனைத்து தூள்களையும் சேர்த்து, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து வைக்கவும்
அத்துடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை கொட்டி நன்கு கிளறவும். மசாலா வாசனை போகும் வரை கிளறி, பின்னர் இறக்கி வைத்து ஆறவிடவும்


பிசைந்து வைத்துள்ள கோதுமை மாவில் இருந்து ஒரு ஆரஞ்சு அளவு எடுத்து, கோதுமை மாவில் லேசாக சப்பாத்திப் போல் தேய்க்கவும்.
அதன் மத்தியில் ஒரு கரண்டி அளவு உருளை மசாலாவை வைக்கவும்.


மசாலா கலவையை வைத்து எல்லா ஓரங்களையும் மையப்பகுதியை நோக்கி மடித்து மசாலா தெரியாதவாறு மூடவும்


இதனை வெறும் கோதுமை மாவில் லேசாக தேய்த்துக்கொண்டு, மீண்டும் சப்பாத்திப் போல் தேய்க்கவும். .


பின்னர் அடுப்பில் ஒரு தவாவை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி, தேய்த்து வைத்துள்ள பரோட்டாக்களில் ஒன்றை எடுத்துப் போட்டு இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும்.


 சுவையான ஆலு பரோட்டா தயார்

மதிப்பீடு:
1

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

People in this conversation