இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

• Home
Home This is where you can find all the blog posts throughout the site.
• Login
Login Login form
• Font size: Larger Smaller
• 5 Comments

வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ் மக்களின் நலன் கருதி

இது வெளிநாட்டில் பணியாற்றும் தமிழ் மக்களின் நலன் கருதி,
என் பணியின் அனுபவத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளையும் ,மற்றும் நம்
இந்தியாவில் உள்ள வங்கிகளில் நடைபெறும் குற்றங்களையும்,
குறைபாடுகளையும்,உங்களுக்கு இந்த இடுக்கையின் மூலமாக
தெளிவுபடுத்துகிறேன்.

வங்கி கணக்கு

இன்று இந்தியாவில் உள்ள அணைத்து வங்கிகளும் வாடிக்கையாளரின் கணக்கு
எண்(அக்கௌன்ட் நம்பர்)எண்ணிக்கையை அதிக படுத்தி உள்ளனர்.

வங்கி பெயர்  கணக்கு எண்

இந்தியன் பேங்க் 9

இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் 15

கனரா பேங்க் 13

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா 11

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் 11

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் 11

கரூர் வைசியா பேங்க் 16

ஐ சி ஐ சி ஐ பேங்க் 12

சிட்டி பேங்க் 10

எச் டி எப் சி பேங்க்  14

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா 10

யூனியன் பேங்க் ஆப் இந்தியா   15

யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா 13

பேங்க் ஆப் பரோடா   14

பேங்க் ஆப் இந்தியா 15

விஜயா பேங்க் 15

யூ கோ பேங்க் 14

சிட்டி யூனியன் பேங்க் 17

தீனா பேங்க் 16

தமிழ்நாடு மெர்கண்டெயில் பேங்க் 15

(இதில் குறிப்பிடபடாத வங்கிகளின் விபரம் , கருத்துரையின் வாயிலாக
கேட்பவர்களுக்கு விபரம் கொடுக்கப்படும்.)

வெளி நாட்டில் பணிபுரிபவர்களின் கவனத்திற்கு...

1 . நீங்கள் உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்பும் பணம் ,உங்கள் வங்கியில்
சரியாக வரவு வைக்கபடுகிறதா என்று கவனம் செலுத்துங்கள்.

2 . மூன்று மாதத்திற்கு ஒரு முறை உங்கள் வங்கியில் இருந்து பற்று வரவு
பதிவை (statement )கேட்டு பெறுங்கள்.

3 .உங்களிடம் பற்று அட்டை (டெபிட் கார்டு ),வரவு அட்டை (கிரெடிட் கார்டு)
உள்ளனவா? அவற்றை அந்நியரிடம் கொடுத்து உபயோகிக்காதீர்கள்.

4 .உங்கள் வங்கி கணக்கு பற்றிய சந்தேகங்களை வங்கி அதிகாரிகளிடம்

மட்டுமே கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.

குறைபாடுகளும் குற்றங்களும்

வங்கியில் பணியாற்றும் பெருபான்மையான ஊழியர்கள், வாடிக்கையாளர்களின்
கேள்விகளுக்கு சரியான முறையில் பதில் கூறுவதில்லை.

அனைத்து வங்கிகளிலும் கணக்கு (அக்கௌன்ட்) இலக்கம் மாற்றப்பட்டு
நீண்ட நாட்கள் ஆகியும், பெருபான்மையான வாடிக்கையாளர்களுக்கு
கொடுக்கபடவில்லை.

பற்று அட்டை (டெபிட் கார்டு) முறை புழக்கத்தில் வந்து நீண்ட நாட்கள்
ஆகியும் சில வாடிக்கையளர்களுக்கு கேட்டும் கொடுக்க படாமல் இழுபறி
செய்கின்றனர்.

கடன் வசதி முறையை அரசாங்கம் அறிவித்தாலும், அவற்றை சில வங்கிகள்
கண்டும் காணததுமாக இருக்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன் ஊடகங்கள் வாயிலாக வந்த செய்திகளை பார்த்து
இருப்பீர்கள், வங்கி உழியர்களே வாடிக்கையாளர்களின் கணக்குகளில் இருந்து
பணத்தை கையாடல் செய்து இருப்பது,கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நவீன தொழில் நுட்பம் நல்ல விசயக்களுக்கும் மட்டும் அல்லாமல், தவறான
விசயங்களுக்கும் பயன் படுத்த படுகிறது. இது போன்று வெளியில் வராத
விஷயங்கள் ஏராளம்.

என் அருமை சகோதரர்களே நீங்கள் பாலைவன நாட்டில் வந்துஉங்கள் உறவுகளை பிரிந்து, வியர்வையை சிந்தி உழைத்த உழைப்பு, கயவர்களால்களவாட பட்டு விட கூடாது என்பதே இந்தஇடுக்கையின் நோக்கம்.

இளம் தூயவன்

Last modified on
Rate this blog entry:
1

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0 / 300 Character restriction
Your text should be in between 250-300 characters

People in this conversation

• VA.ME.SALAHUDEEN

மிகவும் பயனுள்ள அறிவுரை கொடுத்த தமிழ்குடும்பத்தினருக்கு நன்றி

Like 0 Short URL:
• useful information
thanks இளம் தூயவன்

Like 0 Short URL:
• சகோதரரே நல்ல பயனுள்ள செய்தியை தந்துள்ளீர்கள்.

"குறைபாடுகளும் - குற்றங்களும்" அவசியம் எல்லோரும் தெரிந்து கொள்ளவும் , ஞாபகப்படுத்திக்கொள்ளவும் வேண்டியவைகள்.

பகிர்ந்துக்கொண்டதற்கு நன்றி சகோதரர் இளம் தூயவன்.

அன்புடன், சகோதரன் "மஹ்மூது".

Like 0 Short URL:
• வெளிநாட்டு வாழ் நண்பர்கள் பயனுற,
நல்ல குறிப்புக்கள் கொடுத்துள்ளீர்கள்,
இளம்தூயவன். நன்றி!

Like 0 Short URL:
• இளம்- தூயவன்

கருத்துக்கு மிக்க நன்றி சகோ.

by
இளம் தூயவன்

Like 0 Short URL:

உங்கள் கருத்து...

Thanks for the pictures, more visual to see and understand the type of fish available for guy like m...
hai mam pls hair long ah valara simple tips solluga pls
Priya ennudaiya age 23 ennudaiya marbagam sirithaga irukirathu perithaga valara . ennudaiya udambu a...
சே....நான் ரொம்ப சின்ன வயசாக இருக்கும் போது இந்த கதை வந்துச்சு ம.மலாில்..நான் அப்போவிலிருந்து தேடிக்...