இது நம் குடும்பம்!

பயன்பெற்று, பின்னூட்டம் (Comments/ Facebook Like) அளியுங்கள், நன்றி!

  • Home
    Home This is where you can find all the blog posts throughout the site.
  • Login
    Login Login form
  • Font size: Larger Smaller
  • 5 Comments

டயட் (உணவு கட்டுப்பாடு​)...... ஏன் ?

சமீப காலமாக மக்களின் மத்தியில் அதாவது பேச்சில் பத்தியம் (Diet ) என்கின்ற வார்த்தை சர்வ சாதாரணமாக வெளி வருகிறது. ந்த வார்த்தை இவர்களின் வாயில் வருவதற்கு என்ன காரணம்.?

இயற்கையாக உடலில் ஏற்படும் மாற்றமா?

இல்லையெனில் இவர்களே இவர்களின் உடலில் நோய்களை ஏற்படுத்தி கொள்கிறார்களா?

இப்படி பல கேள்விகள்.

மற்றொரு புறம் பத்திய உணவு பற்றி சில நிறுவனங்கள் செய்யும் விளம்பரம் ஏராளம்.

இந்த விளம்பரத்தை நம்பி உடலையும் பணத்தையும்  வீணடித்தவர்கள், ஏராளம்.

சாதரணமாக இன்றைய மனிதர்கள் உடல் எடை கூடினாலும் எடை குறைந்தாலும், இனிப்பு கூடினாலும் இனிப்பு குறைந்தாலும், பிரசர் கூடினாலும் பிரசர் குறைந்தாலும் கொழுப்பு கூடினாலும் மற்றும் குறைந்தாலும் டாக்டரிடம் ஓடுகிறார்கள், அப்படி ஒரு பயம்.

சாதரணமாக ஒவ்வொரு மனிதரின் உடலிலும் கொழுப்பு இனிப்பு உப்பு போன்றவை நார்மலாக இருக்க கூடியது. இவைகள் கூடும் பொழுது அல்லது குறையும் பொழுது

உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது. சில நேரங்களில் உயிருக்கே உலை வைக்க கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதற்கு என்ன காரணம். டாக்டர்கள் பல கருத்துக்கள் கூறினாலும் நாம் அவற்றை நம் அறிவுக்கு உட்படுத்தி சிந்திப்பதை தவிர்க்கிறோம்.

நம் உணவை எடுத்து கொள்வோம் , சாதரணமாக ஒருவரின் உடலுக்கு தேவையான உணவு எவ்வளவோ அதை அருந்தினால் போதும்.

அதை விட்டு விட்டு சில உணவு பொருள்களை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது.

அதுவும் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் சொல்லவேண்டியதில்லை.

1. சிலர் தன்னுடைய வேலைகளை கூட தானே செய்து   கொள்வதில்லை , அதற்கு மற்றவர்களின் உதவியை நாடுவது.

2. பணியாற்றுபவர்களுக்கு பணி பளு, அதாவது தன் வலிமைக்கு   அதிகமாக பணிகளை செய்வது.

3. ஒரே இடத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் தொடர்ந்து    பணி புரிவது.

4. தொடர்ந்து ஓய்வு இன்றி உழைப்பது.

5. நம் உணவு முறையில் ஏற்படுத்திய மாற்றங்கள், அதாவது     இயற்கையான உணவு முறைகளை விட்டு விட்டு ஃபாஸ்ட்  உணவுகளின் மோகத்திற்கு ஆளாகியது.

ஆடைகளை எடுத்து கொள்வோம்.

நாட்டுக்கு நாடு தட்ப வெப்ப நிலை மாறுபடுகிறது.

ஐரோப்பாவை எடுத்து கொண்டால், அவை குளிர் பிரதேசம்  அங்கு உள்ளவர்கள் கோட்டு அணிந்து டை கட்டினால் அவர்களின் குளிருக்கு சரியானது.

அவற்றை இந்தியாவில் உள்ளவர்கள் அணியும் பொழுது அவர்களின் உடலில் சில மாற்றங்கள் ஏற்படலாம்.

வளைகுடாவை எடுத்து கொண்டால் சூடான பகுதி, இங்கு வந்து பணிபுரியும் இந்தியர்கள் பல நோய்களுக்கு ஆளாகியுள்ளார்கள்.

உதாரணமாக இனிப்பு நீர், உப்பு நீர் ,வாய்வு தொல்லை, கிட்னி செயலிழத்தல், இருதய நோய் போன்ற நோய்களை இலவசமாக பெறுகிறார்கள். இங்கு முக்கியமாக
கவனிக்க வேண்டிய விஷயம் சரியான நேரத்தில் யாரும் உணவு அருந்துவது கிடையாது. சில பேர் காலை உணவு என்பது தேவையற்ற உணவு போல் நினைத்து அருந்துவது கிடையாது.  பணம் பணம் பணம் இவை தான் இன்று இவர்கள் மனம்
முழுவதும் நிறைந்து உள்ளது.

குறைந்த காலத்தில் சிகரத்தின் உச்சியை தொட வேண்டும், அவ்வழி எவ்வழி என்பது இவர்களுக்கு முக்கியமில்லை. இப்படி நினைத்து தன் வாழ்நாளை குறைத்து கொண்டு உள்ளார்கள். சிலர் சரியான வழிகாட்டுதல் இல்லாமல், காலம் போன  போக்கில் போய் கொண்டு உள்ளார்கள். மருத்துவர் என்பவர் உங்கள் உடலில் உள்ள பிரச்சினைகளை உங்களிடம் கேட்டு தான் மருந்து கொடுப்பார்கள். உங்கள் உடலில் உள்ள பிரச்சினையை முதலில் நீங்கள் தான்
அறிய முடியும்.

             இயற்கையான உணவுகள் கிடைக்கும் பொழுது, அதை விட்டு விட்டு பதப்படுத்த பட்ட உணவை நாடி செல்வது நமக்கு நாமே கேடு விளைவித்து கொள்வதாகும். உதாரணத்திற்கு ஒரு கிரேனை எடுத்து கொண்டால் கூட, அந்த கிரேனுக்கு எந்த அளவு எடை தூக்க கூடிய அளவுக்கு எடை நிர்ணயிக்கப்பட்டுள்ளதோ அந்த அளவுக்கு
தான் தூக்கும். எந்த ஒரு இயந்திரத்தை எடுத்து கொண்டாலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவிற்கு தான் தன் பணியை செய்யும். மனிதன் மட்டும் இதற்கு அப்பாற்பட்டவனா என்ன?.

ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது, உணவுகளை குறை கூறுவது எந்த விதத்திலும் சரியல்ல என்பது உண்மை. நாமே நமக்கு தீமையை விதைத்து கொள்கின்றோம்.

இளம் தூயவன் {/ic_note)

Last modified on
Rate this blog entry:
2

Overall Rating (0)

0 out of 5 stars

Leave your comments

Post comment as a guest

Type in (Press Ctrl + g to toggle)

0

உங்கள் கருத்து...

இது உங்களுக்கு அலர்ஜியாக இருக்கலாம் டாக்டரிடம் ஆலோசனை பெறவும்
Dear madem i applyied nervslangkottai on my head nearly 20 seed i grained with water and applied. Af...