தமிழ்குடும்பம்.காம், இது உங்கள் குடும்பம்
புத்தாண்டு சபதம் - உணவின் மீது கவனம் செலுத்துங்கள்
சில உணவுகளை முடிந்த வரை இந்த ஆண்டில் இருந்து ஓரம் கட்டி வையுங்கள்:
- அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள், ஸ்வீட் வகைகள்.
- அதிகமாக கேஸ் நிறைந்த குளிபானங்கள்.
- பட்டர்,கீரீம், சீஸ், அதிகமாக எண்ணெயில் பொறித்த உணவுகள், அதிக காரம் நிறைந்த உணவுகள் அனைத்தையும் குறைத்துவிடுங்கள்.
- பக்கெட்டில் அடைத்த சிப்ஸ் வகைகள், டின்னில் வரும் உணவுகள்.
- ப்ரிஜில் வெகு நாட்களாக தூங்கி கிடந்த உணவுகளை சூடு செய்து சாப்பிடாதிங்க.
- அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள்.
- அடிக்கடி ஹோட்டல் ரோட்டோர கடைகளில் உணவுகள் உண்பதை தவிர்பது நல்லது.
இவைகளை முடிந்த வரை சேர்த்த்க்கொள்ளுங்கள்....
- அதிகமாக உணவில் பச்சை காய்கறிகள் சேர்த்துக்கொள்ளவும்.
- தினமும் காலை 11 மணிக்கு காய்கறி சாலட் சாப்பிடவும் அதில் எலுமிச்சை சாறு, பெப்பர்,தக்காளி, கோஸ், கேரட், வெள்ளரிக்காய் போன்றவைகளை சேர்த்து சாப்பிடவும்.
- மாதம் இரண்டு நாள் உண்ணாவிரதம் இருக்கவும்.
- வாரம் ஒரு நாள் காய்கறி அல்லது பழங்களை மட்டுமே உணவாக எடுக்கவும்.
- வருடம் ஒரு முறை கட்டாயம் ஹெல்த் செக் பண்ணவும்.
ஆரோக்கியமான உணவுகள் எடுத்துக்கொடு ஆரோக்கியமாக வாழுங்கள்.
பாயிஜா
Add comment (1)
உங்கள் பகுதி